டூவீலர் மீது கார் மோதி ஒருவர் பலி
அரவக்குறிச்சி:திண்டுக்கல்
மாவட்டம், ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன்
கலையரசன், 37, இவரும், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே
ஜங்கால்பட்டியை சேர்ந்த மலையாளம் மகன் சேகர், 40, ஆகிய இருவரும்,
'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர்' டூவீலரில், நேற்று முன்தினம் இரவு, 9:00
மணிக்கு, கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்,
ஜங்கால்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது,
கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், சென்டர் மீடியனில் மோதி எதிர்சாலைக்கு
சென்று விழுந்தது. அந்தநேரம், எதிர்திசையில் இருந்து வந்த கார்,
டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கலையரசனை மீட்டு,
அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை
பரிசோதித்த டாக்டர்கள், கலையரசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கலையரசனின் நண்பரான சேகர், படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவ
கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டனில் வெடித்தது போராட்டம்; பதாகைகளை ஏந்தி முழக்கம்
-
அசாமில் தொடரும் கனமழை; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக உயர்வு
-
இந்தியாவும், ஆப்ரிக்காவும் உலக முன்னேற்றத்திற்கான சக்திகள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
-
மக்களைக் கொல்ல விரும்பவில்லை; ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்: சொல்கிறார் டிரம்ப்
-
பஸ் நிலையத்தில் கழிவு நீர் பயணிகள் கடும் அவதி
-
எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க மத்திய அரசு ரூ.4 லட்சம் கோடி திட்டம்: முடிவு எடுக்கப்பட்டால் சிலிண்டர் ரூ.18 விலை உயரும்