ரயில்வே சாலையில் குப்பைகள் தேக்கம்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் சாலை அருகே, பஞ்., வார்டுகளில் உள்ள கழிவு குப்பைகள், கோழிக்கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இதனால் அதிகளவில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. தேங்கிய கழிவு குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இரவில், அதிகமான கொசுகள் பரவி வருகிறது. கொசுகள் உற்பத்தி காரணமாக மக்கள் பெறும் அவதிப்பட்டுள்ளனர். மேலும், சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குப்பையால் ஏற்படும் சுகாதார சீர்கேடு காரணமாக பாதிக்கின்றனர். எனவே, பஞ்., நிர்வாகம், தேங்கிய கழிவு குப்பைகள் அகற்றி துாய்மை செய்து, சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement