தமிழக பட்ஜெட் 2026: துறை வாரியாக பட்ஜெட் துளிகள்
பள்ளி கல்வித்துறை
'சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ்'
* முதல் கட்டமாக, அரசின் 10,000 பள்ளிகளில், 139 கோடி ரூபாயில், 'சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ்' திட்டம்
* மொத்தம் 3,734 பள்ளிகளில், 2,132 கோடி ரூபாயில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 'பள்ளி நிறைவுத் திட்டம்!'
பாடத்திட்டம் சீரமைப்பு
* 'பெருந்தலைவர் காமராஜர் சிறப்பு பள்ளிகள்' எனும், உண்டு, உறைவிடப் பள்ளிகள்
* பள்ளி பாடத்திட்டத்தை மறுசீரமைக்க, 25 கோடி ரூபாய்
* பள்ளிகளில், போதைப் பொருள் எதிர்ப்பு அமைப்புகளும், தன்னார்வ குழுக்களும் அமைத்து, '10581' என்ற உதவி எண்ணை, பள்ளிகளில் காட்சிப்படுத்துதல்
* 'போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு' என்ற மொபைல் போன் செயலி வழியே, தகவல் சேகரிப்பு
* பொது நுாலகங்கள், 10 கோடி ரூபாயில், 'டிஜிட்டல்' நுாலகங்களாக மாற்றப்படும்.
நவீன சைக்கிள்
* அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு, 277 கோடி ரூபாயில், 'ஹெல்மெட், வாட்டர் பாட்டில்' வசதிகளுடன், நவீன 'பிராண்ட்' மிதிவண்டிகள்.


நெடுஞ்சாலை துறை
'நம்ம சாலை' செயலியில் புகார் தெரிவிக்கலாம்
* மாநில நெடுஞ்சாலைகளை, நான்கு வழிச் சாலைகளாக அகலப்படுத்தவும், புறவழிச் சாலை அமைக்கவும், 9,300 கோடி ரூபாய்
* பாதுகாப்பான சாலைகள் இயக்கம் அறிமுகம். சாலைகள் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு பணிகளில் தனி கவனம்
* செயற்கை நுண்ணறிவின் வாயிலாக வேகக் கட்டுப்பாடு, போக்குவரத்து சாலை விதிமீறல்களை கண்காணித்தல், சாலை ரோந்துப் பிரிவு மற்றும் தீவிர காயங்களுக்கான சிகிச்சை மையங்கள்
* தமிழக சாலைகளை சீரமைக்க, 250 கோடி ரூபாய் ஒதுக்கல். செயல் திறன் அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம்
* பொது மக்கள், 'நம்ம சாலை' மொபைல் போன் செயலி வாயிலாக, உடனுக்குடன் போட்டோ எடுத்து தகவல் தெரிவிக்கலாம்
* நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்களுக்கு, 21,524 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறை
30,000 பேருக்கு தலா 5 ஆடுகள் இலவசம்
* கூட்டுறவு சங்கங்களில், 14.43 லட்சம் விவசாயிகள் பெற்ற, 5,933 கோடி ரூபாய் தள்ளுபடிக்கு, 8,028 கோடி ரூபாய் ஒதுக்கல்
* குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு, 134 கோடி ரூபாய்
* விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு, 7,432 கோடி ரூபாய்
* நுாறு சதவீத மானியத்தில், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் 30,000 பேருக்கு, தலா ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள். இதற்காக, 110 கோடி ரூபாய்
* பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபடும், 1.93 லட்சம் மீனவர்களுக்கு, பணியில்லா காலத்தில் வழங்கப்படும் 6,000 ரூபாய் உதவித்தொகை, 7,000 ரூபாயாக உயர்வு
* தகுதி வாய்ந்த 10,000 பெண்களுக்கு, 57 கோடி ரூபாயில், விலையில்லா கறவை மாடுகள்.
சமூக நலத்துறை
12 மாவட்டங்களில் மூத்த குடிமக்கள் இல்லங்கள்
* திருமணமாகும் பெண்களுக்கு, அரசின் சார்பில், எட்டு கிராம் தங்க நாணயம், ஒரு பட்டு புடவை, அண்ணனின் சீராக வழங்க, 812 கோடி ரூபாய்
* காமராஜர் காலை உணவு திட்டத்தில், 15,414 பள்ளிகளில் பயிலும், 15.14 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர்
* மாவட்டந்தோறும், 'மூத்த குடிமக்கள் இல்லங்கள்' அமைக்கப்படும். முதல் ஆண்டில், 6.6 கோடி ரூபாய் செலவில், 12 முதியோர் இல்லங்கள்
* ஐந்து மாவட்டங்களில், நுாலகங்கள், யோகா, தியான வகுப்புகள், உள்ளரங்க விளையாட்டு வசதிகளுடன் கூடிய, 'மூத்த குடி பொழுதுபோக்கு மையங்கள்!'
* கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சிகிச்சை என, பிற நகரங்களுக்கு பயணம் செய்யும் திருநர்களுக்காக, 5 மாவட்டங்களில், 'அரண்' தங்குமிட வசதிகள்.
உயர் கல்வித்துறை
கல்லுாரி மாணவர்களுக்கு 'வெற்றி மடிக்கணினி திட்டம்'
* கல்லுாரி மாணவர்களுக்கு, 2,000 கோடி ரூபாயில், 'வெற்றி மடிக்கணினி திட்டம்!'
* தமிழகம் முழுதும் மாணவர் தங்கும் விடுதிகளை மேம்படுத்த, 10 கோடி ரூபாய் ஆரம்ப மூலதனத்துடன், 'தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம்!'
சிறப்பு சட்ட கல்லுாரி
* 'டி.என்.சுடர்' எனும் திட்டத்தின் கீழ், முக்கிய கல்வி மையங்களில், ஒரு லட்சம் நவீன படுக்கை மற்றும், 'ஏசி' வசதியுடன், 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள், 3,200 கோடி ரூபாயில்; இதற்கு, மாநில அரசின் 20 சதவீத கட்டுமான மானியம் உண்டு
* அடுத்த கல்வியாண்டில், மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லுாரி, 300 மாணவர் சேர்க்கையுடன்.
'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு
* நீட் தேர்வு முறையை உடனடியாக ரத்து செய்து, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு அடிப்படையில், மருத்துவக் கல்வி சேர்க்கையை தொடர, மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துகிறது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
மருத்துவ மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும்
* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு, 1,700 கோடி ரூபாய்
* இத்தகைய மாணவர்களின் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க, அனைத்து சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக முயற்சிகள்
* இவர்கள், தடையின்றி பள்ளி மற்றும் உயர்கல்வியைத் தொடர, கல்வி உதவித்தொகை வழங்க, 372 கோடி ரூபாய்
* மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை, அரசே ஏற்கும் வகையில், 77 கோடி ரூபாய்
* புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு, 25,000 ரூபாய் மானியம், இனி 35,000 ரூபாயாக உயர்கிறது
* கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் கூடுதலாக தொடங்க, 1.05 கோடி ரூபாய்
* கபர்ஸ்தான் மற்றும் கல்லறைத் தோட்டங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்க, 34 கோடி ரூபாய்.
தமிழ் வளர்ச்சி துறை
திருக்குறள் ஒப்புவித்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை
* குறைந்தபட்சம், 300 திருக்குறள்களை ஒப்புவிக்கும், 500 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, தலா 5,000 ரூபாய் ஊக்கத் தொகை
* திருவள்ளுவர் தினத்தன்று, 'காயிதே மில்லத்' பெயரில் விருது
* தமிழ் மொழிக்கென பிரத்யேகமான, செயற்கை நுண்ணறிவு சாம்பிள்
* தமிழ் இணைய கல்விக் கழகம் வழியே, 'தமிழ் பெருந்திரள் மொழி மாதிரி'
* பள்ளி மாணவர்கள், கீழடி, ஆதிச்சநல்லுார் போன்ற தொல்லியல் தலங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு, கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
எரிசக்தி துறை
வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க ரூ.1 லட்சம் மானியம்
* பிரதம மந்திரி சூரிய வீடு, இலவச மின்சார திட்டத்துடன் இணைந்து, புதிய 'வீட்டுக்கூரை சூரிய மின் மானிய திட்டம்' அறிமுகம். ஒரு வீட்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை மானியம்; தற்போது, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
* பிரதம மந்திரி திட்டத்தில், வீடுகளில், 1 கிலோ வாட் திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 30,000 ரூபாய், 2 கி.வாட்டிற்கு, 60,000 ரூபாய், அதற்கு மேல், 78,000 ரூபாய், மத்திய அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியத்துடன் சேர்த்து, ஒரு கிலோ வாட்டிற்கு, 5,000 ரூபாய், 2 கிலோ வாட்டிற்கு, 10,000 ரூபாய், மூன்று கிலோ வாட்டிற்கு, 22,000 ரூபாய் என, மானியம் வழங்க, தமிழக அரசு வழங்கும்
* இதனால், 3 கிலோ வாட்டுக்கும் மேல் அமைப்பவர்களுக்கு மத்திய அரசின் மானியம், 78,000 ரூபாய், தமிழக அரசின், 22,000 ரூபாய் சேர்த்து, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, ஒரு லட்சம் ரூபாயும் கிடைக்கும்
* சென்னையில் உள்ள அனைத்து நுகர்வோருக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள, 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கும், 'ஸ்மார்ட் மீட்டர்!'
* கோவை - அரியலுார் இடையே, 765 கி.வோ., மின் வழித்தடம், 4,000 கோடி ரூபாயில், பொது - தனியார் கூட்டு முறையில் அமைக்கப்படும்
* ஐந்து ஆண்டுகளில், 20,000 மின் வாகன 'சார்ஜிங் மையம்' அமைக்க, முதல்கட்டமாக இந்தாண்டில், 50 கோடி ரூபாய்
* அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கங்களின் வாயிலாக அமைக்கப்படும், 'சார்ஜிங்' நிலையங்களுக்கு, அரசு மானியம்.
ஊரக வளர்ச்சி துறை
இனி 150 நாள் வேலை திட்டம் 'வெற்றி 150' என பெயர் மாற்றம்
* கிராம வேலை உறுதி திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்தி, கூடுதலாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
* தற்போதைக்கு, 5,057 கோடி ரூபாய் பங்களிப்புடன், 12,642 கோடி ரூபாய் செலவில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
* அதேநேரத்தில், கிராம வேலை உறுதி திட்டத்தை, 125 நாளிலிருந்து 150 நாளாக உயர்த்தும், 'வெற்றி 150' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக, கூடுதலாக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம்
* மகளிர் சுய உதவிக் குழுக்களை, குறு தொழில் நிறுவனங்களாக உயர்த்த, சிங்கப் பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம் தொடக்கம். ஒவ்வொரு நிறுவனத்துக்கும், 5 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியம் உண்டு. இந்த ஆண்டில், குழுக்களுக்கு 38,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் தர இலக்கு.
ரூ.3,500 கோடியில் 70,000 வீடுகள்
* கான்கிரீட் வீடு கட்ட, 3.10 லட்சம் நிதி, 5 லட்சம் ரூபாயாக உயர்வு. நடப்பாண்டில், 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 70,000 வீடுகள் கட்ட இலக்கு.
தொழில் துறை
செயற்கை நுண்ணறிவு நகரமாக, 'அறிவகம்'
* புதிய தமிழக தொழில் கொள்கை வெளியிட திட்டம்
* தமிழக தொழில் திறன் விபர பட்டியல் உருவாக்க திட்டம்
* செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும், 'வழிகாட்டி 3.0' எனும் புதிய முதலீட்டு சேவை அமைப்பு அமைக்க திட்டம்
* 'தமிழக ஒற்றைச்சாளர இணையதளம், 3.0'ஐ மேம்படுத்தி, தொழில் தொடங்குவதற்கும், முதலீட்டு திட்டங்களுக்கும் தேவையான அரசு அனுமதி, ஒப்புதல், தடையின்மை சான்றிதழை ஒருங்கிணைத்து, ஒரே இடத்தில் பெறலாம்
* அடுத்த ஐந்து ஆண்டுகளில், 3,200 கோடி ரூபாயில், மாவட்ட வாரியான தொழில் வளர்ச்சி திட்டங்கள்
* துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள், 'விண்வெளி தொழில் முதலீட்டு மண்டலமாக' அறிவிக்கப்படும்
* செயற்கை நுண்ணறிவு, 'டீப் டெக்' மேம்பாட்டிற்காக, 'அறிவகம்' என்ற பெயரில், இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்க நகரம் உருவாக்க திட்டம். இந்நகரில், ஏ.ஐ., பல்கலை, சர்வதேச திறன் மேம்பாட்டு மையம், 'செமிகண்டக்டர்' சோதனை, ஆய்வகம் வசதிகள் இடம்பெறும்.
மக்கள் நல்வாழ்வுத்துறை
கருவுற்ற பெண்களுக்கு 'தாய் கேர்' திட்டம்
* கருவுற்ற பெண்களுக்கு, பிரசவிக்கும் நேரங்களில் தங்குவதற்காக, மாநிலம் முழுதும், கட்டணமில்லா, 'தாய் கேர்' மையம் அமைக்க, 23 கோடி ரூபாய்
* அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க, தாய்மாமன் தங்க மோதி திட்டத்திற்கு, 560 கோடி ரூபாய்
* மாநிலம் முழுதும், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள். ஒவ்வொரு நடமாடும் சிகிச்சை மையத்திலும், தலா ஒரு டாக்டர், நர்ஸ், இயன்முறை மருத்துவர் பணியில் இருப்பர்
* தொலைதுார மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு, சிறப்பு மருத்துவ பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்ய, 'தொலை மருத்துவ பராமரிப்பு அமைப்பு'கள் ஐந்தை உருவாக்கி, அவற்றுடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனை அளவிலான 200 கிளைகளை இணைக்க திட்டம்
* புற்றுநோய் மருத்துவமனைகள், உயர் சிகிச்சை மருத்துவமனைகளாக மாற்றப்படும்
* உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்றுநோயாளிகளின் மருந்துகளுக்கான நிதி ஒதுக்கீடு, 100 கோடி ரூபாயாக உயர்வு.
மேலும்
-
பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டனில் வெடித்தது போராட்டம்; பதாகைகளை ஏந்தி முழக்கம்
-
அசாமில் தொடரும் கனமழை; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக உயர்வு
-
இந்தியாவும், ஆப்ரிக்காவும் உலக முன்னேற்றத்திற்கான சக்திகள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
-
மக்களைக் கொல்ல விரும்பவில்லை; ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்: சொல்கிறார் டிரம்ப்
-
பஸ் நிலையத்தில் கழிவு நீர் பயணிகள் கடும் அவதி
-
எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க மத்திய அரசு ரூ.4 லட்சம் கோடி திட்டம்: முடிவு எடுக்கப்பட்டால் சிலிண்டர் ரூ.18 விலை உயரும்