நேர்மையான துாய்மை பணியாளர்கள் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கவுரவிப்பு
கடலூர்: குப்பையில் கிடந்த நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்களை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் கவுரவித்தார்.
கடலுார் அடுத்த நத்தப்பட்டு ஊராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் வழக்கம் போல் தங்களது கிராமப் பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரித்தபோது, 2 சவரன் நகை மற்றும் பணம் குப்பையில் இருப்பதை கண்டெடுத்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
நகையை குப்பையில் போட்டு விட்டு தேடிக் கொண்டிருந்த வீட்டு உரிமையாளர் தகவல் கிடைத்து தூய்மை பணியாளர்களிடமிருந்து நகையை பெற்றுக் கொண்டார்.அடுத்தவர் பொருட்களுக்கு ஆசை படாத நேர்மையான துாய்மை பணியாளர்களை, கலெக்டர் பாராட்டினார்.
இதனை அறிந்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவரான ஜி.ஆர்.கே., குழும நிர்வாக இயக்குனர் துரைராஜ், துாய்மை பணியாளர்களை தனது வீட்டிற்கு அழைத்து உணவு வழங்கி பாராட்டி பரிசு வழங்கினார்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயலாளர் வள்ளிவிலாஸ் சீனிவாசன், பொருளாளர் தேவி முருகன் மற்றும் நிர்வாகிகள் இளைஞரணி சதீஷ், இணை செயலாளர் சரவணன், வீனஸ் ஞானசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும்
-
தடுப்புகள் உடைந்து அவல நிலை அதிருப்தியில் சுற்றுலா பயணிகள்
-
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு; பிற்பகலுக்கு விசாரணை ஒத்திவைப்பு
-
நியாயமான நிதி பகிர்வு கோரும் அரசு தீர்மானம் நிறைவேற்றம்: திமுக, அதிமுக ஆதரவு
-
சொல்கிறார்கள் ––––––––––––––– ‘காங்கேயம் மாடுகள் எங்கள் வாழ்வின் ஓர் அங்கம்!’ –––––––––––––––
-
அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு; நிபந்தனை விதித்த திமுக
-
தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார்; சட்டசபையில் முதல்வர் விஜய் உருக்கம்