காங்கேயத்தில் திருட்டால் அச்சம்

காங்கேயம்,:காங்கேயத்தில் காடையூர் சந்திப்பில் வணிக கடைகள், கிளீனிக் மற்றும் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் நவீன் என்பவருக்கு சொந்தமான கிளீனிக்கில் நேற்று முன்தினம் இரவு புகுந்த ஆசாமிகள், லேப்டாப் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் திருடி சென்றுள்ளனர்.

அருகில் இருந்த நடராஜின் சலுான்யிலும் திருட்டு போயுள்ளது. அருகிலுள்ள ஐயப்பன், மூர்த்தி ஆகியோரின் மளிகை கடைகளில் பூட்டை உடைத்துள்ளனர். ஆனால் திருட்டு எதுவும் போகவில்லை. நேற்று காலை சம்பந்தப்பட்டவர்கள் கடை திறக்க சென்றபோது, திருட்டு, திருட்டு முயற்சி நடந்தது தெரிந்தது. இதனால் அப்பகுதி கடைக்காரர்கள், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காங்கேயம் போலீசார் கைவரிசை காட்டிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Advertisement