ஆதிதிராவிடர் நலத்துறை முகாம்:  75 மனுக்கள் மீது உடனடி தீர்வு

விருத்தாசலம்: ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சிறப்பு முகாமில் பெறப்பட்ட 166 மனுக்களில், 75 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

விருத்தாசலம் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., வெங்கடேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் முருகன் முன்னிலை வகித்தார். தனி தாசில்தார் அந்தோணிராஜ் வரவேற்றார்.

தாட்கோ மாவட்ட மேலாளர் அருள்முருகன் பயனாளிகளிடம் மனுக்கள் பெற்றார். முகாமில், துாய்மை பணியாளர்கள் நலவாரிய அட்டை, எஸ்.டி., (நரிக்குறவர்) ஜாதி சான்றிதழ், இலவச வீட்டுமனைப் பட்டா, தையல் இயந்திரம், புதிய ரேஷன்கார்டு, ஆதார் கார்டு உட்பட 166 மனுக்கள் பெறப்பட்டு, 75 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Advertisement