தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்; முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை: தமிழ் என்றால் விருந்தோம்பல். சுருக்கமாக சொன்னால் தமிழ் என்றால் கெத்து, பவர்; தமிழை பின்னால் தள்ளினால் தமிழகம் சும்மா இருக்காது என முதல்வர் விஜய் பேசினார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று முதல்வர் முன்மொழிந்த தீர்மானம், சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு இன்று (ஆகஸ்ட் 10) தமிழக சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது. அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்ற தனித்தீர்மானத்தை கொண்டு வந்து சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதாவது: மொழி எப்பொழுதும் தொடர்புக்கான ஒன்று தான்; இல்லை என்று யாரும் மறுக்கவே முடியாது. உலகத்தில் இருக்கும் எல்லா மொழிக்கும் இது பொருந்தும்.
அதையும் யாரும் மறுக்க முடியாது. நமது தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல; பேசினால் வரும் ஓசை மட்டுமல்ல, நமது உயிர். அது நமது உணர்வு. நம்மை பெற்ற தாயை அம்மா என்று சொல்லும் போது எல்லாம் பாசமும், சொந்தமும் நம்மளை அறியாமலேயே உயிராக, உணர்வாக தானா உள்ளுக்குள்ளே தோன்றும். அதே மாதிரி, இன்னும் ஒரு படி மேலே போய் சொல்லலாம். தமிழ் என்று சொன்னாலே எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்.
புனிதமானது
தாய் எப்படி மிகப்பெரிய புனிதமோ, அது மாதிரி தாய்மொழி புனிதமானது. தாயை போற்றும், வாழ்த்தும் தமிழக மண் தமிழ்தாய் வாழ்த்தை எப்படி விட்ரும், விடாது. விடவும் மாட்டோம். தமிழ்தாய் வாழ்த்து 1891ல் மனோன்மணியம் சுந்தரனார் நமது தமிழ் மொழியை தமிழ் தாய் என்று சொல்லி உயர்வாக பாடினார். இந்தியாவின் நெற்றியில் இருக்கும் வெற்றி பொட்டு மாதிரி, தமிழ்நாடு.
அந்த பொட்டின் நறுமணம் உலகம் முழுவதும் பரவும் மாதிரி, தமிழின் புகழும் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்றார். இன்றைக்கு தமிழ் பேசும் மக்கள் இல்லாத நாடுகள் குறைவு தான். தமிழும், தமிழனும் இல்லாத நாடு ஏது? தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல, பண்பாடு, நாகரிகம், சிந்தனை, அன்பு ஆகும்.
கெத்து, பவர்!
தமிழ் என்றால் விருந்தோம்பல். சுருக்கமாக சொன்னால் தமிழ் என்றால் கெத்து, பவர். அந்த தமிழின் புகழை சொல்லும் தமிழ்தாய் வாழ்த்து. உலகத்தையே நமது தமிழ் உயர்த்தி பிடிக்கிறதே தவிர, எந்த மொழியையும், எந்த மதத்தையும், எந்த இனத்தையும், எந்தவொரு தனி மனிதனை கூட தாழ்த்தி பேசவில்லை. யாரையும் கொஞ்சம் கூட காயப்படுத்தவில்லை.
நமது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெயர் இருக்கும். ஒரு கூட்டத்தில் யாரும் பெயர் சொல்லி கூப்பிட்டால் நாம் ஒருவர் மட்டும் தான் திரும்பி பார்ப்போம். தமிழ், தமிழ் என்று சொன்னால் ஒட்டுமொத்தமாக நாம் எல்லோரும் திரும்பி பார்ப்போம்.
ஒன்றாக வந்து...
நமக்கு தமிழ் என்று அடையாளத்தை கொடுத்தது தமிழ் தான்; பெயர், சொல், மிகப்பெரிய வரலாறு என்றால் தமிழ் தான். உயர்த்தி பிடிக்கும் தமிழை பின்னாடி தள்ளினால் தமிழகம் எப்படி பொறுத்து இருக்கும். ஒரு கட்சிக்கு பிரச்னை என்றால் சம்பந்தப்பட்ட கட்சி மட்டும் தான் போராடும்.
தமிழ் என்று சொன்னால் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றாக வந்து நிற்கும். உலகில் தோன்றிய பல மொழிகள் காலப்போக்கில் மறைந்து போய் இருக்கிறது என்று சொல்வார்கள். நமது தமிழ் காலம் காலமாக நீடித்து நிற்கும் ஒன்று. தமிழ் என்றால் என்ன இல்லை. உலகம் முழுவதும் தெரிந்த திருக்குறள் ஒன்று போதாதா, தமிழின் பெருமையை சொல்வதற்கு?
அடையாளம்
தமிழ் மொழியின் அடையாளம் தான் தமிழ்தாய் வாழ்த்து. ஒட்டுமொத்த இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்தி பேசும் தமிழ்தாய் வாழ்த்து, நமது ஊர், நமது தமிழகத்தில் முதல் இடத்தில் தான் இருக்க வேண்டும். நமது இந்திய அரசியல் சாசனமே, ஒவ்வொரு மாநிலத்தின் மொழிக்கும், பண்பாட்டுக்கும், பாரம்பரியத்துக்கும், பாதுகாப்பு உரிமை கொடுத்து இருக்கிறது. அந்த உரிமையின் அடிப்படையில் தமிழ் தாய் வாழ்த்துக்கு முதல் இடத்தை கொடுத்து தான் ஆக வேண்டும். அது தான் மாநில உரிமை.
1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் தமிழ் தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்று அரசாணை போட்டு செயல்பாட்டுக்கு வந்தது. 2021ல் டிசம்பர் 17 முதல் மாநில பாடலாக அங்கீகாரம் வழங்கப்பட்டது. 2026ல் ஜனவரி 28ம் தேதி மத்திய அரசு சில நடைமுறைகளை வெளியிட்டது.
அதில் மாநில பாடல் குறித்து எந்த வழிமுறையும் இல்லை. நமது அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியிடம் மாநில பாடலுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் என்றும், மாநில விழாக்களில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவதற்கான வழிமுறைகள் வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தோம்.
சமரசம் செய்யாது
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதுதான் வேற்றுமையில் ஒற்றுமை . தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதை விஷயத்தில் தமிழக அரசு ஒரு போதும் சமரசம் செய்யாது. தமிழை பின்னால் தள்ளினால் தமிழகம் சும்மா இருக்காது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன், தமிழ்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும்.
இந்த தீர்மானத்தை அனைத்து கட்சியை சார்ந்த உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டுகிறேன். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
வெவ்வேறு கட்சி தலைவர்களும் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர். இதையடுத்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம்: சட்டசபையில் முதல்வர் விஜய் பரபரப்பு பேச்சு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
First we are Indian, then proud Tamilan
நேர்மையானவர்கள் என்றால் தமிழ் கடவுளை வழிபடுங்கள்
தமிழ் பண்பாட்டை பின்பற்றுங்கள்
இந்த நாட்டை அழித்து ஒழித்து கொள்ளையடிக்க வந்த வெளிநாட்டு பண்பாடுகளை கைவிடுங்கள்
இதுதான் உண்மையான தமிழனின் அடையாளம்
போலி வேஷங்கள் இங்கு வேண்டியது இல்லை
தொடர்ந்து வேஷம் போட்டு ஏமாற்றுபவர்கள் குடும்பங்களுடன் நாசமாக வேண்டும் என்று தமிழ் கடவுள் முருகவேளை பிரார்த்தனை செய்கிறோம் சாபம் விடுகிறோம்
சூப்பர் ஒரு யோசனை ஒரு ஒரு MLA, MP தமிழ்நாட்டில் இருந்து பதவி பிரமாணம் செய்யும் பொழுது பிழை இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும்... சரியாக பாடவில்லை என்றால் MLA, MP பதவி கிடையாது என்று அரசாணை வேண்டும்
தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று கூறி ஆங்கிலத்தை உயர்த்தி பிடித்தவர் பெரியார். அவர் வழி வந்த திராவிட கட்சிகளும், தமிழ் மொழி கற்பது கட்டாயம் என்ற ஒரு நிலையை ஆரம்ப கல்வியில் கூட உருவாக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர், தமிழ் மொழி குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாமல், உயர் பட்டங்களை எளிதாக பெற முடியும் என்ற இழிநிலை உள்ளது. எனவே தவெக அரசு, திராவிட கட்சிகள் வழியில் செல்லாமல், தமிழை உண்மையில் காப்பாற்ற முன்வர வேண்டும். இல்லையேல் வருங்காலத்தில், தமிழை தமிழகத்தில் தேட வேண்டிய நிலைதான் ஏற்படும்.
தீய மற்றும் துஷ்ட சக்திகளின் வாயை மூடுவதற்க்கு இப்படி விஜை சில நேரங்களில்
நடிக்க வேண்டியுள்ளது
இவர் என்ன பெருசா சொல்லிட்டாருபா? இவ்வளவு பெருதாக பேச ஓன்றுமில்லை. எல்லா தமிழனும் இதையே தான் சொல்லுவான். தமிழ் தாய் வாழ்த்துக்கு முதல் உரிமை நல்ல செய்தி. எதுக்கு இவ்வளவு முக துதி பாடலோ
முதலில் ழ என்று சொல்ல பழகி கொள்ளுங்கள். அண்ணாமலை முதற்கொண்டு ழ வை ல என்று கூறுகிறார்கள். எல்லோரையும் தினசரி பவழம்தாங்கள் பழனிசாமி வாழை பழத்தில் வழுக்கி விழுந்தான் என்று நூறு முறை சொல்ல வைக்க வேண்டும்.
முதல்வர் அய்யா அதை இப்பவாவது தனி சக்தின்னு சொல்லணும்…
விஜய் நீண்டநாள் வாழ வாழ்த்துக்கள்.
தமிழனின் மானமும், வீரமும் தமிழ் உணர்வும் அசைக்க முடியாது.
மானமும் வீரமும் டாஸ்மாகில் நிறைய கிடைக்குது
தொட்டபெட்டா ரோடுமேல முட்ட பரோட்டாவும் அழகு தமிழ்தான். அதுவும் தம்ளன்ஸ் விரும்பி கேட்கிற பாட்டாச்சே அதுக்கும் முக்கியத்துவம் குடுக்கணுமா வேணாமா.
விடியல் திராவிடனுங்க தமிழ் வளர்த்த உதாரணம் தஞ்சை தமிழ் பல்கலை ....இந்த பல்கலையின் தர குறியீடு தரமில்லாத NAAC B+ ...ஒரு நேரம் இந்த பல்கலையை தர வரிசை பட்டியலில் இருந்தே நீக்கும் நிலைமை இருந்தது ...வகுப்பறைகளை சாராய பார்களாக மாற்றிய குற்றச்சாட்டுகூட எழுந்தது ..... பல்கலை உலக தரத்தில் இருந்தால் அங்கு படிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் ....இப்படி தரை மட்டத்தில் இருந்தால் இங்கு படிப்பவனுக்கு என்ன வேலை கிடைக்கும் ....தமிழ் தமிழன் தமிழன்டா ...