வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சற்று குறைவு; இன்றைய நிலவரம் இதோ!


சென்னை: சென்னையில் வார தொடக்க முதல் நாளான இன்று (ஆகஸ்ட் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 08) ஆபரண தங்கம் விலை கிராமுக்கு, 65 ரூபாய் உயர்ந்து, 13,965 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 520 ரூபாய் அதிகரித்து, 1,11,720 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றிமில்லை.

இன்றைய நிலவரம்




சென்னையில் வார தொடக்க முதல் நாளான இன்று (ஆகஸ்ட் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்


சிறப்பு வீடியோ!

இன்றைய தங்கம் விலை நிலவரங்களை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?

தினமலர் பிரத்யேக வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement