போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
காவல்துறை சார்பில் எம்.எஸ். தக்கா அருகே துவங்கிய ஊர்வலத்தை ஏ.டி.எஸ்.பி., திருமால், டி.எஸ்.பி., அசோகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஊர்வலம் உழவர் சந்தை, பஸ் நிலையம் வழியாக காவல் நிலையம் அடைந்தது.
ஊர்வலத்தில் இன்ஸ்பெக்டர்கள் சுமதி, ஆனந்த், சரஸ்வதி, போலீசார், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம் விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை மற்றும் அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பில், மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய ஊர்வலத்தை அனைத்து மக்கள் சக்தி இயக்கம் வெங்கடேசன் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பத்மா தலைமை தாங்கினார். ஊர்வலத்தில், 'போதையை ஒழிப்போம்; புது உலகம் படைப்போம்' முழுக்கத்துடன், ஆசிரியர்கள், மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் பழைய பஸ் நிலையத்திலிருந்து துங்கிய ஊர்வலத்தை எஸ்.பி., ஷஹ்னாஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போதைப்பொருள், மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊர்வலத்தில், போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
ஏ.டி.எஸ்.பி., சரவணன், டி.எஸ்.பி., கலையரசன், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
மேலும்
-
நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்த்தி அறிவிப்பு; வரலாற்றில் இதுவே முதல்முறை என சட்டசபையில் முதல்வர் விஜய் பெருமிதம்
-
இந்திய இயற்பியலாளர் தீபக் தாருக்கு டிராக் பதக்கம் அறிவிப்பு
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சற்று குறைவு; இன்றைய நிலவரம் இதோ!
-
காதலியை கொலை செய்த இந்திய மாணவன்; அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தப்ப முயன்ற போது கைது
-
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்; முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்
-
எப்.சி.ஆர்.ஏ., சட்ட திருத்த மசோதாவில் வெளிப்படைத்தன்மை, தெளிவான விதிகள்!