இரு தொகுதிகளுக்கு ஒரு மா.செ., திட்டம் எப்போது என தி.மு.க.,வினர் எதிர்பார்ப்பு

2

மதுரை: தி.மு.க.,வில் இரு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் நியமிக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் குமுறுகின்றனர்.

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், தி.மு.க., தோல்விக்கான காரணங்களை கண்டறிய 36 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு, தொகுதிவாரியாக அக்குழு ஆய்வு செய்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் அறிக்கை அளித்தது.

அதில், மொத்தம் உள்ள 78 மா.செ.,க்களில் 24 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும், இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மா.செ., நியமிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.

ஆனால், கட்சியின் மூத்த தலைவர்கள் தலையீட்டால் 24 மா.செ.,க்கள் மீதான நடவடிக்கை, புதிய மா.செ.,க்கள் நியமனம் ஆகியவை தள்ளிப்போவதால், பதவியை எதிர்பார்த்துள்ள, இளைஞரணி நிர்வாகிகள் விரக்தியடைந்து உள்ளனர்.

இளைஞரணி நிர்வாகிகள் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், த.வெ.க.,வில் தொகுதி வாரியாக மா.செ.,க்களை அறிவித்து விட்டனர். ஆனால், சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்கள் தெரிந்தும் கூட, கட்சிக்குள் நடவடிக்கை எடுக்க தி.மு.க., தயங்குகிறது.

சீனியர் தலைவர்கள், ஆறு சட்டசபை தொகுதிகள் வரை, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கோலோச்சுகின்றனர்.

புதிய மா.செ.,க்களை நியமித்தால் தான், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவே, மா.செ.,க்கள் அறிவிப்பை, ஸ்டாலின் விரைவில் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement