பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் வாணாபுரம் தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்டத்தின் கீழ் குறைகேட்பு முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த முகாமிற்கு, தனி தாசில்தார் சிலம்பரசன் தலைமை தாங்கினார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் கவுசல்யா, இளநிலை வருவாய் ஆய்வாளர் ஜெயஸ்ரீ, தனி வருவாய் ஆய்வாளர்கள் மணிவேல், வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.
முகாமில், ரேஷன் கார்டில் புதிதாக உறுப்பினரை சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி திருத்தம், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் தொடர்பாக 26 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்திற்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.
வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கினார்.
முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிறைமதி, இளநிலை வருவாய் ஆய்வாளர் வினோத்குமார் முன்னிலை வகித்தனர். பல்வேறு கோரி க்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 13 மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.
மேலும்
-
நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்த்தி அறிவிப்பு; வரலாற்றில் இதுவே முதல்முறை என சட்டசபையில் முதல்வர் விஜய் பெருமிதம்
-
இந்திய இயற்பியலாளர் தீபக் தாருக்கு டிராக் பதக்கம் அறிவிப்பு
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சற்று குறைவு; இன்றைய நிலவரம் இதோ!
-
காதலியை கொலை செய்த இந்திய மாணவன்; அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தப்ப முயன்ற போது கைது
-
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்; முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்
-
எப்.சி.ஆர்.ஏ., சட்ட திருத்த மசோதாவில் வெளிப்படைத்தன்மை, தெளிவான விதிகள்!