போதை ஒழிப்பு உறுதிமொழியேற்பு மாவட்டத்தில் நாளை நடக்கிறது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகள், மற்றும் இளைஞர்கள் அதிகம் கூடும் இடங் களில் நாளை 11ம் தேதி போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடபெற உள்ளது.

கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:

போதையில்லா தமிழ்நாடு எனும் உயர்ந்த இலக்கினை அடையும் வகையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக சென்னையில வரும் 11ம் தேதி முதல்வரால் உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதே சமயத்தில் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் கூடுமிடங்களில் போதை ஒழிப்ப உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்திட மாவட்டம் நிர் வாகம் திட்டமிட்டுள்ளது.

அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல். ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கலெக் டர், எஸ்.பி., உள்ளிட்ட உயர்நிலை அலுவலர் கள் ஆங்காங்கே நடக் கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.

போதை ஒழிப்பு உறுதி மொழியினை பொதுமக்கள் https://www.drugfreetamilnadu.tn.gov.in/en#pledge எனும் இணைய முகவரியிலும் ஏற்றுக்கொள்ளலாம்.

அதில் உறுதி மொழி ஏற்பவர்களுக்கு இணையம் மூலம் சான்றிதழ் வழங்கிடவும், அரசு சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப் பட்டுள்ளது.

Advertisement