மானியத்தில் மக்காச்சோளம் விதை விவசாயிகள் பயன்பெற அழைப்பு

சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றியத் தில் மக்காச்சோளம் விதைகள் மானியத்தில் வாங்கி பயன்பெறலாம் என, விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அழை ப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் கீர்த்தனா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மங்களூர் ஒன்றியத் தில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் 20,500 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இதனை ஊக்குவிக்கும் வகையில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் ஆகியவை மூலம் செயல் விளக்க திடல்கள் 1216 ஹெக்டர் பரப்பளவில் அமைக்க ரூ., 1.38 கோடியும், பொது விநியோகத் திட்டத்தில் இடுபொருள் வழங்க ரூ., 64.35 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்காச்சோள செயல் விளக்க திடல் அமைக்க ஒரு ஹெக்டருக்கு, 15 கிலோ விதை, 12.5 கிலோ நுண்ணூட்ட கலவை, 1 லிட்டர் திரவ உயிர் உரம், 15 கிலோ பயிர் வளர்ச்சி ஊக்கி, 4 கிலோ உயிரியல் பூச்சிக்கொல்லி உள்ளடங்கிய இடுபொருட்கள் ரூ.11,500 மானியத்தில் வழங்கப்படும்.

பொது விநியோகத் திட்டத்தில் ஒரு ஹெக்டருக்கு 15 கிலோ விதை வீதம் ரூ.1500 வழங்கப்படும். மேலும், 50 சதவீத மானியத்தில் 12.5 கிலோ நுண்ணூட்ட கலவை, 1 லிட்டர் திரவ உயிர் உரம், 15 கிலோ பயிர் வளர்ச்சி ஊக்கி, 4 கிலோ உயிரியல் பூச்சிக்கொல்லி உள்ளடங்கிய இடுபொருட்கள் வழங்கப்படும்.

இதனை தேவைப்படும் விவசாயிகள் ஆதார் நகல், சிட்டா உட்பட தேவையான ஆவணங்களை அருகே உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement