நாய் கடித்து 14 ஆடுகள் பலி

வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு அருகே நாய் கடித்ததில் ஆட்டுக்கொட்டகையில் கட்டி இருந்த 14 ஆடுகள் உயிரிழந்தது. 15 ஆடுகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறது.

சுந்தரபாண்டியம் அருகே ராமச்சந்திரபுரம் நாயுடு தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆட்டு கொட்டகையில் 29 ஆடுகள் கட்டப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை 10:30 மணிக்கு ஒரு நாய் கொட்டகையில் புகுந்து அனைத்து ஆடுகளையும் கடித்துள்ளது.

இதில் 14 ஆடுகள் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 15 ஆடுகள் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்துார் கால்நடைத்துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

சம்பவம் குறித்து கால்நடைத்துறை, கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement