தேனியில் தியாகிகள் பெயர் பலகை மாயம்

தேனி:தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்கள் பொறித்த பலகை மாயமாகி உள்ளது. இதனை மீண்டும் வைக்க தியாகிகள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் தேனி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்த 29 தியாகிகள், அவர்கள் வசித்த கிராமங்களின் விபரங்களுடன் அலுவலகத்தில் பெயர்பட்டியல் வைத்திருந்தனர். இதன் மூலம் சுதந்திர பேராட்ட தியாகிகள், அவர்கள் குடும்பத்தினர் பற்றி தெரிந்த கொள்ள விரும்பியவர்கள் உதவியாக இருந்தது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பழைய ஒன்றிய அலுவலக கட்டடம் இடித்து அகற்றப்பட்டு புதிய கட்டடம் கட்டினர். அதில் தியாகிகள் பெயர்கள் இடம் பெற்ற பெயர்பலகை யை வைக்க அதிகாரிகள் மறந்து விட்டனர்.

தியாகிகள் குடும்பத்தினர் கூறுகையில், 'வரும் சுதந்திர தினத்திற்கு முன் சுதந்திர போராட்ட தியாகிகள் பெயர் பலகை வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement