போதைப் பொருள் ஒழிப்பு மாணவர்கள் மனித சங்கிலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டில் இயங்கும் அரசு கலை, அறிவியல் கல்லுாரி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.

கள்ளக்குறிச்சி பழைய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் தர்மராஜா தலைமை தாங்கினார். கல்லுாரி மேலாண்மைக்குழு உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர் கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலர் விஜய பிரபாகரன் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார்.

தொடர்ந்து கல்லுாரி துறைத்தலைவர்கள் மோட்சஆனந்தன், முருகானந்தன், அலுவலக கண்காணிப்பாளர் மகேஷ் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Advertisement