போதைப்பொருள் இல்லாத தமிழகம் துாய்மை பணியாளர்கள் உறுதிமொழி
காரைக்குடி:காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில், போதைப் பொருள் இல்லாத தமிழகம் நிகழ்ச்சி எல்.இ.டி.,யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதோடு துாய்மை பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சென்னை மாநிலக் கல்லுாரியில் முதல்வர் விஜய் தலைமையில், போதைப் பொருள் இல்லாத தமிழகம் எனும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழகம் முழுவதும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் கமிஷனர் பாலு தலைமையில், மாநகர நல அலுவலர் வினோத் முன்னிலையில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில்,
மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுத்தனர்.சென்னையில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement