போதைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம்: திருச்சி அரசு பள்ளிக்கு 'ஹாட்ரிக்' விருது
திருச்சி : திருச்சி அருகே, போதைக்கு எதிராக தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அரசு பள்ளிக்கு, தொடர்ந்து மூன்றாவது முறையாக விருது வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, சமுத்திரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்குகிறது. இங்கு, 214 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பள்ளி தலைமை ஆசிரியராக ராஜசேகர் என்பவர் உள்ளார்.
இப்பள்ளியில், போதை பொருட்கள் எதிர்ப்பு மன்றம் செயல்படுகிறது. இதன் அமைப்பாளராக ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உள்ளார். இந்த மன்றம் வாயிலாக, மூன்று ஆண்டுகளாக பள்ளி மாணவ - மாணவியர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரில், தொடர்ந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.
முதலாண்டு பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியர் தங்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதி, 20 பேர் போதை பழக்கத்தை கைவிட்டனர். இரண்டாம் ஆண்டு, போதை மறுவாழ்வு மையங்களில் சிகிச்சை பெறுவோருக்கு, மாணவ - மாணவியர் சிறு தொகையை மணியார்டர் வாயிலாக அனுப்பி, அவர்கள் நலம் பெற ஊக்கமளித்தனர்.
மூன்றாம் ஆண்டு, போதை விழிப்புணர்வு தொடர்பாக படங்கள் எடுத்து, தங்கள் பெற்றோர் மொபைல்போன்களில் 'ஸ்டேட்டஸ்' வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்களின் இந்த செயலுக்காக ஏற்கனவே இரண்டு முறை, போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தில் சிறந்த பள்ளி என்ற விருது, இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டது.
அதேபோல், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும், சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளி விருதை, திருச்சி கலெக்டர் பிரதிக் தயாள் நேற்று முன்தினம் வழங்கி, ஆசிரியர்களையும் மாணவர்களையும் பாராட்டினார்.
மேலும்
-
டில்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்; பயணிகள் 2 பேர் கைது
-
அரசியலமைப்பு புத்தகம் காங்கிரஸ் கட்சியினர் கையில் இருந்து என்ன பயன்; நிர்மலா சீதாராமன் காட்டம்
-
பணியிடங்களில் பாலியல் தொந்தரவு : இரண்டு ஆண்டுகளில் 510 புகார்கள் -பார்லி.,யில் மத்திய அரசு தகவல்
-
அ.தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம் மாநகர செயலாளர் அழைப்பு
-
மின்நுகர்வோர் குறைதீர் முகாம்
-
நடுவீரப்பட்டில் திருவிளக்கு பூஜை