புத்தேரி மகா மாரியம்மனுக்கு ஆடி அமாவாசை சிறப்பு பூஜை  

திட்டக்குடி:திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு ஆடி அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.

அதனையொட்டி நேற்று மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியபொடி களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.



Advertisement