பஸ் மோதி அக்கா கண் முன் தங்கை பலி

போரூர்: திருவேற்காடு அடுத்த, புளியம்படு பகுதியைச் சேர்ந்தவர் குமார் மகள்கள் கீர்த்திகா, 26, மற்றும் சர்மிளா, 23. நேற்று மதியம், போரூரில் உள்ள கடைக்கு செல்வதற்காக, ஸ்கூட்டரில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.

போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசு பேருந்து, ஸ்கூட்டரின் மீது மோதியதில், இருவரும் நிலை தடுமாறி விழுந்தனர்.

இதில், சர்மிளா உடல் மீது அரசு பேருந்தின் டயர் ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கீர்த்திகா, லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் அய்யப்பன், 50, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement