சிதம்பரத்தில் குடும்பத்துடன் தூங்கிய போது துணிகர திருட்டு:20 பவுன் தங்கச் செயின் 25 ஆயிரம் பணம் அபேஸ்
சிதம்பரம்:சிதம்பரத்தில் குடும்பத்துடன் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 20 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் கனகசபை நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குட்டு இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார், இவரது மனைவி செந்தாமரை, 57; இவர் கடந்த 9 ஆம் தேதி இரவு வழக்கம்போல் குடும்பத்தினர் அனைவரும் தூங்கி உள்ளனர்
அதிகாலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் அறையில் இருந்த பீரோ, உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் . அதைத் தொடர்ந்து திறந்து கிடந்த பீரோவை பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் செயின், 4 கிராம் எடையுள்ள 1 ஜோடி தோடு மற்றும் 25 ரொக்கப் பணம் உள்ளிட்டவை திருடு போனது தெரிய வந்தது, இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தாமரை, இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்
போலீசார் விசாரணையில் , வீட்டின் முன் பக்க வாசல் மெயின் கேட்டு திறந்து இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கேட்டை திறந்து கொண்டு மாடியில் குடியிருந்த செந்தாமரை வீட்டிற்கு சென்று அங்கு பூட்டி இருந்த கேட்டை உடைத்து,வீட்டிற்குள் சென்று பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து சிதம்பரம் குற்றப்பிரிவு போலீசார் இரண்டு நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் சிதம்பரம் நகர பகுதியில் கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
டில்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்; பயணிகள் 2 பேர் கைது
-
அரசியலமைப்பு புத்தகம் காங்கிரஸ் கட்சியினர் கையில் இருந்து என்ன பயன்; நிர்மலா சீதாராமன் காட்டம்
-
பணியிடங்களில் பாலியல் தொந்தரவு : இரண்டு ஆண்டுகளில் 510 புகார்கள் -பார்லி.,யில் மத்திய அரசு தகவல்
-
அ.தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம் மாநகர செயலாளர் அழைப்பு
-
மின்நுகர்வோர் குறைதீர் முகாம்
-
நடுவீரப்பட்டில் திருவிளக்கு பூஜை