சி.ஜி.எல்., தேர்வு ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு புதுச்சேரி தேர்வு ஆணையம் அறிவிப்பு

புதுச்சேரி: ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வுக்கு ஹால் டிக்கெட் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி அரசின் தேர்வு ஆணைய உறுப்பினர் செயலாளர்  முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள மையங்களில் வரும் 21 முதல் 23ம் தேதி வரை ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வுகள் நடைபெற உள்ளன. இத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை https://recruitment.py.gov.in மற்றும் https://recruitment.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட்டில் புகைப்படம் மற்றும் கையொப்பம் தெளிவாக இல்லாத தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் தாங்கள் விண்ணப்பித்துள்ள பணியிடங்களுக்கான தேர்வு நேரத்தை அட்டவணையில் சரியாகச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தேர்வு அமர்வும் தொடங்குவதற்கு சரியாக ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வர்கள் மையத்திற்கு வந்து சேர வேண்டும். தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே மையத்தின் நுழைவு வாயில் மூடப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு தேர்வர்கள் 0413-2233338  என்ற தொலைபேசி எண்ணை வரும் 20ம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி மையச் சேவை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement