மலை தேனீக்கள் அகற்றம் நிம்மதியடைந்த மக்கள்

கரூர்:கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே மலை நகர் பகுதியை சேர்ந்தவர் கோகுல், 35. இவரது வீட்டின் அருகே இருந்த சீமை கருவேல மரத்தில், ஆயிரக்கணக்கான மலை தேனீக்கள் கூடு கட்டி அந்த வழியாக செல்லும் பொதுமக்களை கொட்டி அச்சுறுத்தி வந்தது.

இதுகுறித்து புகழூர் தீயணைப்பு துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சுப்பிரமணியம் தலைமையிலான வீரர்கள், சீமை கருவேல மரத்தில் கூடு கட்டியிருந்த, ஆயிரக்கணக்கான மலை தேனீக்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினர். இதனால் அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Advertisement