கரூரில் கட்டட பொருட்கள் கண்காட்சி தொடக்கம்
கரூர்:கரூர்,
கோவை சாலையில் உள்ள பிரேம் மஹாலில், மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கம்
சார்பில், கட்டட பொருட்கள் கண்காட்சி துவக்க விழா நடந்தது.
மாவட்ட
தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் சங்க தலைவர் காவேரி
பாலசுப்ரமணியன் வரவேற்றார். கண்காட்சியை, சிவில் இன்ஜினியர்ஸ்
அசோசியேஷன் நிறுவன தலைவர் செல்ல
முத்து, கரூர் ஜவுளி
உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் தலைவர் அட்லஸ்
நாச்சிமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர். இங்கு இண்டீரியர்,
எக்ஸ்டீரியர், டோர்ஸ், விண்டோஸ், பெயின்ட், எலக்ட்ரிக்கல்ஸ், ஹார்டு
வேர்ஸ்,
சோலார், கிரானைட், டைல்ஸ் உள்பட தேவையான உபரணங்கள், ரெடிமிக்ஸ்
கான்கிரீட் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. நேற்று
தொடங்கிய கண்காட்சி வரும், 16ம் தேதி முடிவடைகிறது. நிகழ்ச்சியில்,
பில்டர் எக்ஸ்போ சேர்மன் பாஸ்கரன், நிறுவன செயலாளர் சிவக்குமார்,
நிறுவன பொருளாளர் ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.