போலீசாருக்கு இன்று ஒரு நாள் பயிற்சி முகாம்

1

கரூர்:போலீசாருக்கு, அன்பான அணுகுமுறை குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று நடக்கிறது என, கரூர் எஸ்.பி., ஹரி கிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில், இன்று காலை, 9:00 மணிக்கு போலீசாருக்கு அன்பான அணுகுமுறை குறித்த, ஒரு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. இதில், பொதுமக்களிடம் கனிவுடனும், மரியாதையுடனும், பொறுமையுடனும் அணுகி, அவர்களின் குறைகளை உரிய முறையில் கேட்டறிந்து, பொதுமக்கள் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement