கிரைம் கார்னர்
கள்ளக்காதல்: ஒருவர் கைது
விக்கிரவாண்டி அடுத்த வெட்டுக்காட்டைச் சேர்ந்தவர் பாஸ்கர், 30; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி ராஜேஸ்வரி பிரிந்து சென்ற நிலையில் இவர் அதே பகுதியில் திருமணமான பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருந்தார்.
இதனை அறிந்து அந்த பெண்ணின் அண்ணன் வடிவேல், பாஸ்கரை பலமுறை கண்டித்தும் கேட்காததால் நேற்று முன்தினம் பாஸ்கரை தாங்கினார். பாஸ்கர் கொடுத்த புகாரின் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து வடிவேலை, 30; கைது செய்தனர்.
துாக்குப்போட்டு கணவர் தற்கொலை
புதுச்சேரி மாநிலம், கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், 47; குடிப்பழக்கமுடைய இவர், நரம்பு தளர்ச்சியால் பாதித்து சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் மது குடித்ததால் அவரது மனைவி வாசுகி, 43; கண்டித்தார். இதனால், மனமுடைந்த பார்த்திபன், விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தவர் அங்கு துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வயிற்று வலி: ஒருவர் தற்கொலை
விழுப்புரம், மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத், 41; விழுப்புரத்தில் பொக்லைன் கம்பெனியில் ஏரியா மேலாளராக பணிபுரிந்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபரை தாக்கியவர் கைது
விழுப்புரம் அடுத்த தெளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன், 28; இவர், கடந்த 11ம் தேதி மொபைல் போனில் பொதுவாக திட்டி கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த இளையபெருமாள், 47; தன்னைத்தான் திட்டுகிறார் என நினைத்து தகராறு செய்து ரவீந்திரனை தாக்கினார். புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து இளையபெருமாளை கைது செய்தனர்.
கணவருடன் தகராறு: மனைவி தற்கொலை
விக்கிரவாண்டி அடுத்த சிவபெருமான் பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரன் மனைவி ரேவதி, 40; கூலித் தொழிலாளி. சந்திரன் தினமும் மது குடித்து விட்டு வந்ததால் தம்பதிக்கிடையே தகராறு நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாலை சந்திரன் குடித்து விட்டு வந்ததால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரேவதி புடவையால் துாக்குப்போடடு தற்கொலை செய்து கொண்டார். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சுதந்திர தின விழா கோலாகலம்; டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
-
பல்வேறு துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி புதிய உச்சம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
அனைத்து கோவில் நிலங்களையும் ஏலத்தில் விடக்கோரி கிராம மக்கள் மனு வழங்கல்
-
போக்குவரத்து நெரிசலை தீர்க்க கரூரில் ஒத்திகை
-
வீட்டில் உணவு சாப்பிட்ட பின் பணம் திருடி சென்ற மர்ம நபர்கள்