வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில் மாணவியர் பேரவை பொறுப்பேற்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில், மாணவியர் பேரவை நியமன விழா சமீபத்தில் நடந்தது.
செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில், மாணவியர் பேரவை நியமன விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, வித்யாசாகர் கல்வி குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமையில், சமீபத்தில் நடந்தது.
இந்த விழாவில், மாணவியர் பேரவை தலைவியாக சூர்யா தீத்தா, துணைத் தலைவராக ஹரிஸ்ரீ, செயலராக சமிஹாதாஜ், துணை செயலராக லோக ஜனனி, பொருளாளராக ராகவி, துணை பொருளாளராக சாருமதி உள்ளிட்டோர் பொறுப்பேற்று கொண்டனர்.
அதன்பின், தொழில் முனைவோர், தொண்டு நிறுவனர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான பிரபோத் ஜெயின் பங்கேற்று, வித்யாசாகர் கல்வி குழுமத்தின் சார்பில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பல்கலை தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த 200 மாணவியருக்கு, 10 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கினார்.
இதில், கல்லுாரி முதல்வர் அருணா தேவி, பேராசிரியர்கள் மற்றும் மாணவியர் பங்கேற்றனர்.
மேலும்
-
சுதந்திர தின விழா கோலாகலம்; டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
-
பல்வேறு துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி புதிய உச்சம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
அனைத்து கோவில் நிலங்களையும் ஏலத்தில் விடக்கோரி கிராம மக்கள் மனு வழங்கல்
-
போக்குவரத்து நெரிசலை தீர்க்க கரூரில் ஒத்திகை
-
வீட்டில் உணவு சாப்பிட்ட பின் பணம் திருடி சென்ற மர்ம நபர்கள்