இந்திய மக்களுக்கு அமெரிக்கா சுதந்திர தின வாழ்த்துக்கள்
புதுடில்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பல்வேறு துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி புதிய உச்சம் தொட்டு வருகிறது, என்றார்.
நாட்டின், 80வது சுதந்திர தினம் கோலாகலமாக இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
சுதந்திர தின நல்வாழ்த்துகள். காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றிய எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சல், தியாகம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
@quote@வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி நாம் ஒன்றிணைந்து பயணிக்கும் வேளையில், அவர்களின் கனவுகள் நமக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.quote
140 கோடி இந்தியர்களின் பங்களிப்புடன், நமது நாடு பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியின் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. வரும் காலங்களிலும் இந்தப் பயணம் இன்னும் வேகமான முன்னேற்றத்துடன் தொடரட்டும். இவ்வாறு பிரதமர்மோடி கூறியுள்ளார்.
அமெரிக்கா வாழ்த்து
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா சார்பில், இந்திய மக்களுக்கு அவர்களின் சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையிலான தனிப்பட்ட உறவின் காரணமாக, அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவு தொடர்ந்து வளர்ந்து வருவதுடன், முன்னெப்போதையும் விட வலுவாகவும் உள்ளது.
பாதுகாப்பு, எரிசக்தி, கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி மற்றும் வர்த்தகம் வரை பல்வேறு துறைகளில் வலுவான உறவு இரு நாடுகளையும் அதிக வளம் மிக்கதாக மாற்றுகிறது. நமது இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நட்பு மற்றும் உறவுகள், புதுமையான மற்றும் எதிர்காலத்திலும் வலுவான உறவுக்கு அடித்தளமாக அமைகின்றன. நமது இரு நாடுகளும் இணைந்து உருவாக்க விருக்கும் எதிர்காலத்தை அமெரிக்கா ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது. இவ்வாறு மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
Remember when people laughed at the Make in India slogan back in 2014. Fast forward to today and India is the second biggest mobile manufacturer on Earth with a massive 33 fold surge in mobile production. Electronics exports jumped 11 times over and 12 semiconductor projects are clearing the way for full self reliance. PM Modi turned big promises into pure execution.மேலும்
-
2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும்; டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேச்சு
-
சுதந்திர தின விழா கோலாகலம்; டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
அனைத்து கோவில் நிலங்களையும் ஏலத்தில் விடக்கோரி கிராம மக்கள் மனு வழங்கல்
-
போக்குவரத்து நெரிசலை தீர்க்க கரூரில் ஒத்திகை
-
வீட்டில் உணவு சாப்பிட்ட பின் பணம் திருடி சென்ற மர்ம நபர்கள்