இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-நமது நிருபர்-
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது . இதன் மையப்புள்ளி, கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள எண்டே நகரத்திலிருந்து 68 கி.மீ. வட-வடமேற்கில் அமைந்திருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், தற்போதைக்கு உயிர்சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. உள்ளூர் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சேதமடைந்த கட்டடங்களைக் காட்டும் பல புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
மேலும்
-
2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும்; டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேச்சு
-
சுதந்திர தின விழா கோலாகலம்; டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
-
இந்திய மக்களுக்கு அமெரிக்கா சுதந்திர தின வாழ்த்துக்கள்
-
அனைத்து கோவில் நிலங்களையும் ஏலத்தில் விடக்கோரி கிராம மக்கள் மனு வழங்கல்
-
போக்குவரத்து நெரிசலை தீர்க்க கரூரில் ஒத்திகை
-
வீட்டில் உணவு சாப்பிட்ட பின் பணம் திருடி சென்ற மர்ம நபர்கள்