வீட்டில் உணவு சாப்பிட்ட பின் பணம் திருடி சென்ற மர்ம நபர்கள்

கரூர்:கரூர் அருகே, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உணவு சாப்பிட்ட பின், பணத்தை திருடி சென்றுள்ளனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பாரதிதாசன் நகர், முதலாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி, 55; இவர், நேற்று முன்தினம் காலை டெக்ஸ் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று விட்டார். பிறகு, இரவு வீட்டுக்கு வந்தபோது, கதவு திறந்து கிடந்தது. வீட்டில் வைக்கப்பட்ட உணவுகள் சிதறி கிடந்துள்ளன.
மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 8,000 ரூபாயையும் காணவில்லை. வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மது அருந்தி வீட்டில் இருந்த உணவை சாப்பிட்டு விட்டு, பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, சுப்புலட்சுமி போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement