காரில் வலம் வரும் திருடர்கள்: மானாமதுரை மக்கள் அச்சம்

மானாமதுரை:மானாமதுரையில் காரில் வந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, இரவில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல் அதிகரித்துள்ளது. மானாமதுரை அண்ணாமலை நகர் பகுதியில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு

பூட்டியிருந்த 2 வீடுகளை மர்ம கும்பல் காரில் வந்து நோட்டமிட்டு இரவில் வீடுகளின் பூட்டுகளை உடைத்துநகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது. போலீசார் விசாரணை மேற்கொண்ட போதிலும், இதுவரை திருடர்களை கண்டுபிடிக்க

முடியாத நிலை நீடிக்கிறது.

அண்ணாமலை நகர் பகுதியில் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட அதே காரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்த கும்பல் மானாமதுரை பகுதியில்

ஒரே இரவில் பூட்டியிருந்த 4 வீடுகளை குறிவைத்து நடந்த திருட்டில் 27 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் வரை கொள்ளையடித்து தப்பியுள்ளனர்.

போலீசார் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement