நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி; அமெரிக்காவில் சுதந்திர தின விழா கோலாகலம்
நியூயார்க்: இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் (Times Square) இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு சிறப்பு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்திய தேசியக் கொடி (மூவர்ணக் கொடி) பாரம்பரியமாக ஏற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் 80வது சுதந்திரத்தை கொடியேற்றி கொண்டாட நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் பகுதிக்கான இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடுகள் செய்தது.
நியூயார்க் நகரில் இந்தியச் சமூகத்தினரும் அமைப்புகளும் இணைந்து கோலாகலமாக சுதந்திர தின விழாவைக் கொண்டாடினர். டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பிரபலங்களும் இந்திய வம்சாவளியினரும் கலந்துகொண்டனர். நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தின் ஜெனரல் பினய் ஸ்ரீகாந்த் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்.
இது குறித்து நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த பதிவில் கூறியிருப்பதாவது: சுதந்திர விழா கொண்டாட்டம் இந்திய-அமெரிக்க சமூகத்தினர் மற்றும் இந்தியாவின் நண்பர்களை ஒன்றிணைத்து, ஒற்றுமையை வெளிப்படுத்தியது.
கலாசார நிகழ்ச்சிகள் இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தை பறைசாற்றியதுடன், இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவின் வலிமையையும் பிரதிபலித்தன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
@block_Y@
அதேபோல், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு துபாய் புர்ஜ் கலிபா கட்டடம், தேசியக் கொடியின் மூவர்ணத்தில் ஒளிர்ந்தது.block_Y
எல்லா வற்றையும் விட தேசம் முக்கியம் என்ற கோட்பாடு அந்நிய கலப்பு ரத்தம் ஓடும் ஜென்மங்களுக்கு தேசியத்தின் மீது எப்படி அக்கறையிருக்க முடியும். சுய நலமும் பதவி வெறியும் கொள்ளையடிக்கும் குணமும் கொண்ட அந்த கும்பலுக்கு எப்படியிருக்கும். அதிசய அந்த கபோதிகளுக்கு நாட்டை அயல் நாட்டிற்கு காட்டி கொடுக்கும் குணமும் உண்டு.
அயல் நாட்டில் இந்திய கொடிக்கு மரியாதை உள் நாட்டில் நம் தேசிய பாடலுக்கு அவமரியாதை. அவர்கள் கட்சியை சேர்ந்தவர்கள் சிந்திக்க வேண்டும்.
மிக சிறப்பு நிகழ்வுகள்மேலும்
-
மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
-
திருட்டு கார்களுக்கு போலி ஆவணங்கள்: கேரள ஆசாமி 16 ஆண்டுகளுக்கு பின் கைது
-
ஆளில்லாத வீட்டில் பெட்ரோல்குண்டு வீசிய சம்பவம்: ஒருவர் கைது
-
மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
-
பார்வையற்ற ஆசிரியை பதிவேட்டில் விளையாடும் சக ஆசிரியர்கள் மீது புகார்