6,000 டன் ரேஷன் அரிசி ஊழல்; அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
-நமது நிருபர்-
புதிதாக அரைத்த 6,000 டன் அரிசிக்கு பதிலாக, அரவை ஆலை உரிமை யாளர்களுடன் கூட்டு சேர்ந்து பழைய அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பிய ஊழல் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் கடையில் விநியோகிப்பதற்காக, அரைக்கப்பட்ட அரிசியை தராமல் மாற்றி தந்து விட்டதாக புகார் வந்தது. அரிசி அரைக்கும் ஆலை உரிமையாளர்கள் உடன் அதிகாரிகள் தொடர்பில் இருந்தது முறைகேடு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அரிசி அரைக்கும் முகவர்களாகச் செயல்படும் நான்கு தனியார் அரிசி ஆலைகள், தங்களுக்கு வழங்கப்பட்ட நெல்லில் புதிதாக அரைக்கப்பட்ட அரிசிக்கு மாற்றாக ரூ.10.82 கோடி மதிப்புள்ள 6,000 டன் பழைய அரிசியை வழங்கி முறைகேடு செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
அரைப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்கிய நெல்லிலிருந்து பெறப்பட்ட புதிய அரிசி, தனியார் சந்தைக்குத் திருப்பிவிடப்பட்டிருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரிசி அரைக்கும் முகவர்களிடமிருந்து பெறப்பட்ட அரிசியின் தரத்தைச் சரிபார்க்கும் பொறுப்பில் இருந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் மற்றும் தரக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர், அந்த ஆலைகளுடன் கூட்டுச் சேர்ந்து, பழைய அரிசியைப் பெற்று தானியக் கிடங்குகளில் சேமிக்க அனுமதித்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இந்த முறைகேடு புகாரில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் மற்றும் தரக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக நான்கு அரிசி அரைக்கும் ஆலையின் ஒப்பந்தங்களை ரத்து செய்து, அவற்றை கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த முறைகேடு 2025-26 காரீப் சந்தைப்படுத்தல் பருவத்தில் மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்றது; மேலும் இது பல மாவட்டங்களில் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தினமலர்க்கு வாழ்த்துக்கள்.மாபாதகமான ஊழல் நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காமிச்சதுக்கு நன்றி நன்றி நன்றி.
ஒப்பந்த ரத்து கருப்பு பட்டியல் சஸ்பெண்ட். இது போதாது. இந்த மாதிரி அநியாயங்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.பழங்கால தண்டணை முறையில் ஒன்றான குற்றவாளிகளின்
கால்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு குதிரையில் கட்டி அதன்பின் குதிரைகளை எதிர் எதிர் திசையில் விரட்டி குற்றவாளியின் கால்களை உயிரோடு பிய்த்து ஏறிந்து விடுவார்கள்
இவிங்க ஆட்சிக்கு வந்த நாள் லேந்து சஸ்பெண்டு பண்ணின ஊழல் இலஞ்ச குற்றவாளிகள் எல்லாம் 90 நாள் விரதம் முடிஞ்சு வேலைக்கு திரும்ப ஆரம்பிச்சுட்டாங்க.
மக்களின் வயிற்றோடு விளையாடும் இவர்களுக்கு தண்டனை என்பது அதிகட்சம் 90 நாட்கள் பாதி சம்பளம். அதற்குப்பிறகு விடுதலை விடுதலை தினமும் இலஞ்சம் ஊழல் மூலம் இரட்டிப்பு சம்பளம் .
கடுகளவே ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது . மக்களின் வாழ்வாதாரம் ஆகிய உணவுத் தானியங்களில் முறைகேடு செய்தவர்களை அ - விலிருந்து அக்கு வரையில் கண்டறிந்து தண்டிக்கப் பட வேண்டும்
விடியலின் ஆட்சியில் ஆரம்பத்தில் இருந்தே இத்தகைய ஊழல்கள் நடக்கிறது.
திருட்டுத் திராவிடன் அனைத்து துறைகளிலும் புகுந்துள்ளான் அந்த மில் விசாரித்து பார்த்தால் திமுக காரன் உடையதாக இருக்கும் எந்த விதத்திலும் மக்களுக்கு நன்மை செய்து விடக்கூடாது என்பதுதான் திராவிட மாடல்.
6000 டன் என்றால் 2 மட்டுமாகாது 200 க்கும் கூடுதலான திருட்டு அதிகாரிகள்
என்பதை ஊடகம் ஆதாரத்தோடு உறுதி படுத்த வேன்டும்
For 6000 ton rice scam only suspension? What if general public steals 100gms of ration?
தரம் குறைந்த மாற்று அரிசி என்று சொல்லவும். பழைய அரிசி என்பது சிறந்ததே. விலையும் அதிகம்.
திருட்டு கட்சி சப்போர்ட்டரா?