வாஜ்பாய் நினைவு தினம்; டில்லியில் ஜனாதிபதி, சிபிஆர், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
புதுடில்லி: டில்லியில் வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபிராதாகிருஷ்ணன் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 16) அனுசரிக்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபிராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ''அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறோம். அவர் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு சிறந்த அரசியல் ஆளுமை. தனது வாழ்நாளைத் தேச சேவிற்காக அர்ப்பணித்தார். அவரது முயற்சிகளும் பல தலை முறையினரை ஊக்கப்படுத்தின.
அவரது தலைமைத்துவம் நம் தேசத்தை வலுப்படுத்தியது. நல்லாட்சி மற்றும் மக்கள் நலன் மீதான அவரது கவனம் என்றும் நமக்கு வழிகாட்டியாகத் திகழும்'' என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் போர் நடந்த போது.... பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா நமது நாட்டை மிரட்டிய போது.... பாகிஸ்தான் தாக்குதல் நடத்தட்டும்.... எங்களுக்கு கொஞ்சம் பாதிப்பு வரலாம்....
திரு வாஜ்பாய் பிரதமராக இருந்தது இந்தியாவிற்கு அது வசந்தகாலம் கொண்டிருந்தோம்அதற்கு பிறகு ,வசந்த காலம்.கோடை காலம்.இலையுதிர் காலம்.மீண்டும் வசந்த காலம் 2014 லில் மோடிஜி தலைமையில் துவங்கியது.வாஜ்பாயின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறோம். அவர் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு சிறந்த அரசியல் ஆளுமை தனது வாழ்நாளைத் தேசத்திருக்காக அர்ப்பணித்தார். அவரது முயற்சிகளும் பல தலை முறையினரை ஊக்கப்படுத்தின.மேலும்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
-
பரபரப்பான சூழலில் கூடியது தமிழக சட்டசபை; திமுக- தவெக உறுப்பினர்கள் காரசார விவாதம்
-
விசிக மாநாட்டுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
-
மேற்குவங்கத்தில் சோகம்; ஹோட்டலில் தீ பற்றியதில் 7 பேர் உடல் கருகி பலி
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ரத்தேஷ் ராஜூவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
-
பீஹார் கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் பலி