டீக்கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

பெரம்பலுார்: டீக்கடையில் சிலிண்டர் வெடித்து, தீ விபத்து ஏற்பட்டதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த, இருவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.

பெரம்பலுார் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் அருணாசலம், 40. இவர், பெரம்பலுார் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் டீக்கடை வைத்துள்ளார். கடந்த 11ம் தேதி இவரது டீ கடையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில், காஸ் வெளியாகி தீப்பிடித்து வெடித்தது. இதில், டீ மாஸ்டர், வாடிக்கையாளர்கள், அவ்வழியே சென்றவர்கள் என 16 பேர் படுகாயமடைந்தனர்.

இதில், ஏற்கனவே, மணிகண்டன்42, என்பவர் 13ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டீ மாஸ்டரான சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தினேஷ்,32, பெரம்பலுார் ரெங்கா நகரை சேர்ந்த சகாதேவன்,53, ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் 20 சதவீதம் முதல் 63 சதவீதம் வரை படுகாயமடைந்த 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement