‘சிறந்த ரஷ்ய இலக்கியங்கள் தமிழுக்கு வர வேண்டும்’
கோவை: விஜயா வாசகர் வட்டம் சார்பில், கே.எஸ்.சுப்பிரமணியன் நினைவு மொழிபெயர்ப்பு விருதுகள் வழங்கும் விழா, ஆருத்ரா ஹாலில் நடந்தது. வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராமசாமி தலைமை வகித்தார்.
எழுத்தாளர் அரும்பு சுப்ரமணியம், ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ என்ற நாவலை ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார்.
மலையாள எழுத்தாளர் ஷாபி செருமாவிலாயி தமிழில் இருந்து நாவல் மற்றும் சிறுகதைகளை மலையாள மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கே.எஸ்.சுப்பிரமணியன் நினைவு மொழிபெயர்ப்பு விருது வழங்கப்பட்டது.
எழுத்தாளர் அரும்பு சுப்ரமணியம் பேசுகையில், ‘‘பொதுவாக ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு, இலக்கிய படைப்புகளை மொழிபெயர்க்கும் போது, மூலமொழியில் உள்ள அர்த்தம் மாறாமல் மொழியாக்கம் செய்ய வேண்டும். ரஷ்ய மொழியை தமிழில் மொழிபெயர்ப்பது கஷ்டம். சிறந்த ரஷ்ய இலக்கியங்கள் தமிழுக்கு வரவேண்டும்,’’ என்றார்.
விஜயா பதிப்பகம் உரிமையாளர் வேலாயுதம், எழுத்தாளர்கள் கோபாலகிருஷ்ணன், அமரந்தா, சுப்ரமணியம் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.
மேலும்
-
காலை உணவு திட்ட டெண்டர் ரத்து கடையநல்லுார் நகராட்சி நடவடிக்கை
-
காட்டு யானையை கண்காணிக்க குழுக்கள்
-
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் காணிக்கை நகையை அணிந்த பூஜாரி சஸ்பெண்ட்
-
பறவைகள் சரணாலயம் அருகே கல்குவாரிக்கு அனுமதி கிராம மக்கள் எதிர்ப்பு
-
ஜெல்லி மீன்களால் மின் உற்பத்தி நிறுத்தம்
-
ஆன்லைன் வர்த்தகம் என ரூ.19.97 லட்சம் மோசடி