சாலை பள்ளத்தால் விபத்து ‘ஏசி’ மெக்கானிக் உயிரிழப்பு
திருவொற்றியூர்: சாலை பள்ளத்தால் பைக் விபத்திற்குள்ளானதில், ‘ஏசி’ மெக்கானிக்காக பணிபுரியும் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பழைய வண்ணாரப்பேட்டை, லாலாகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் அராபத், 26; ‘ஏசி’ மெக்கானிக். இவர், நேற்று அதிகாலை, எண்ணுாரில் இருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி, தன் ‘யமஹா எம்.டி., 15’ பைக்கில் சென்றார்.
திருவொற்றியூர், கே.வி.கே., குப்பம் – எண்ணுார் விரைவு சாலையின் அணுகு சாலையில் சென்றபோது, சாலை பள்ளத்தில் இறங்கிய பைக் நிலைதடுமாறி, இடபக்கம் கடலுடன் இணையும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் வடிகால் மதகில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த அராபத், சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
-
திருட்டு கார்களுக்கு போலி ஆவணங்கள்: கேரள ஆசாமி 16 ஆண்டுகளுக்கு பின் கைது
-
ஆளில்லாத வீட்டில் பெட்ரோல்குண்டு வீசிய சம்பவம்: ஒருவர் கைது
-
மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
-
பார்வையற்ற ஆசிரியை பதிவேட்டில் விளையாடும் சக ஆசிரியர்கள் மீது புகார்