கோலியனுாரான் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவு குவியல்கள்
விழுப்புரம்: விழுப்புரம் நகரில் செல்லும் கோலியனுாரான் வாய்க்காலில், பிளாஸ்டிக் கழிகள் குவிந்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் நகரின் மையப்பகுதியில், கோலியனுாரான் வாய்க்கால் செல்கிறது. விழுப்புரம் அடுத்த தெளி தென்பெண்ணை ஆற்றில் உருவாகும் இந்த வாய்க்கால், கோலியனுார் ஏரி வரை ஆற்று தண்ணீர் செல்லும் வகையில் ஏற்படுத்தப்பட்டது. காலப்போக்கில் இந்த வாய்க்கால் விழுப்புரம் நகரின் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது.
நகரபகுதியில் இந்த வாய்க்காலில், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, கோலியனுாரான் வாய்க்காலில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அணையில் தண்ணீர் திறந்தும் முதல் போக நெல் சாகுபடி துவக்குவதில் சிக்கல்: ஒட்டான்குளம் கண்மாயை நம்பியுள்ள 500 ஏக்கர் பாசன விவசாயிகள் கவலை
-
கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் இறந்த மீன்கள் தொடரும் அதிர்ச்சி!: ஆலை ரசாயன கழிவுகளே காரணம் என குற்றச்சாட்டு; வாழ்வாதாரம் பாதிப்பதாக மீனவர்கள் சாலை மறியல்
-
கத்தரிக்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
-
மாவட்ட அளவிலான செஸ் போட்டி
-
சீரற்ற மின் வினியோகம் நடப்பதால் தொழில் துறை பாதிப்பு: அரசு கவனம் தேவை!
-
சுதந்திர தின விழா
Advertisement
Advertisement