மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் சுதந்திர தினத்தன்று மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காதர்ஷெரீப் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசை பார்த்ததும், புதுச்சேரி மாநில மது பாட்டில் விற்ற கூத்தக்குடி சந்தைத்தோப்பு பாலமுருகன், 46; தப்பியோடினார். போலீசார் அங்கிருந்த 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து பாலமுருகனை தேடி வருகின்றனர்.
இதேபோன்று, கீழ்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தேவமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியின் போது மதுபாட்டில் விற்ற ராமமூர்த்தி, 37; என்பவரை கைது செய்து, 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ரோந்து பணியின் போது, கா.அலம்பலம் பகுதியில் மதுபாட்டில் விற்ற மகேஷ், 35; ஆறுமுகம் மனைவி விஜயா,43; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து, 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தியாகதுருகம் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ரோந்து பணியின் போது, பழைய பல்லகச்சேரியில் மதுபாட்டில் விற்ற ஏழுமலை, 46; என்பவரை கைது செய்து, 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மொத்தமாக, 5 பேர் மீது வழக்கு பதிந்து, அதில் 2 கைது செய்ததுடன், 38 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
பாஜவுக்கு புது நிர்வாகிகள் நியமனம்: ஸ்மிருதி இரானி, வசுந்தரா ராஜேவுக்கு முக்கிய பதவி
-
ஊரக வளர்ச்சி துறை மாவட்ட பேரவை கூட்டம்
-
மழை குறைந்தும் அருவியில் நீர்வரத்து
-
‘சிறந்த ரஷ்ய இலக்கியங்கள் தமிழுக்கு வர வேண்டும்’
-
5 நாளுக்கு ஒருமுறை குடிநீர் 'சப்ளை': திருத்தணி நகராட்சியில் மக்கள் சிரமம்
-
சாலை பள்ளத்தால் விபத்து ‘ஏசி’ மெக்கானிக் உயிரிழப்பு