பஸ் நிலையத்தில் பள்ளம் டிரைவர்கள் கடும் அவதி

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் ஏற்பட்டுள்ள மெகா சைஸ் பள்ளத்தால் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகாவிற்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இங்கிருந்து தினமும் நுாற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பஸ் நிலையத்தில் இருந்து வாகனங்கள் வெளியே வரும் வாயில் பகுதியில் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியை பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கடக்கும்போது டிரைவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பிரதான பஸ் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பஸ் நிலையத்தில் ஏற்பட்டுள்ள மெகா சைஸ் பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement