மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் விழா ஆகஸ்ட் 18 ல் துவங்குகிறது.
கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 66ம் ஆண்டு பிரம்மோற்சவம் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் ஆகஸ்ட் 18 ல் துவங்கி வரும், செப்.,10ம் தேதி வரை 24 நாட்கள் நடக்கிறது.
இதற்கிடையே, கோவிலில் கடந்த ஜூலை 5ம் தேதி மூலவர் விமான பாலஸ்தாபனம், பரிவாரமூர்த்திகள் விமானம் பாலஸ்தாபனம் மற்றும் திருப்பணி துவக்க பூஜை நடந்தது. பிரம்மோற்சவ உபயதாரர்களின் கோரிக்கையை ஏற்று, குருமார்கள் வகுத்துள்ள விதிமுறைப்படி இந்தாண்டு பிரம்மோற்சவத்தில், சுவாமி வீதிவுலா தவிர்க்கப்பட்டு, சுவாமிக்கு அபிேஷக அலங்காரம் செய்து, தீபாராதனை நடக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
காலை உணவு திட்ட டெண்டர் ரத்து கடையநல்லுார் நகராட்சி நடவடிக்கை
-
காட்டு யானையை கண்காணிக்க குழுக்கள்
-
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் காணிக்கை நகையை அணிந்த பூஜாரி சஸ்பெண்ட்
-
பறவைகள் சரணாலயம் அருகே கல்குவாரிக்கு அனுமதி கிராம மக்கள் எதிர்ப்பு
-
ஜெல்லி மீன்களால் மின் உற்பத்தி நிறுத்தம்
-
ஆன்லைன் வர்த்தகம் என ரூ.19.97 லட்சம் மோசடி