மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் கோட்டத்தில் மின் நுகர்வோர்களுக்கான  குறைதீர் முகாம் ஒட்டன்சத்திரம் செயற்பொறியாளர்  அலுவலகத்தில் இன்று (ஆக.,18ல்) காலை 10:00 மணிக்கு  நடக்கிறது. இதில் ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், கன்னிவாடி  பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று மின் இணைப்பு  பெறுதல், மாற்றுதல், கோரிக்கைகள், புகார்கள் குறித்து  தீர்வு காணலாம் என, ஒட்டன்சத்திரம் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராணி தெரிவித்துள்ளார்.

Advertisement