களிமண் மாறவில்லை... பார்க்கும் பார்வைதான் மாறியுள்ளது

'நானே ராஜா, நானே மந்திரி' என தன் திறமை மீது நம்பிக்கை வைத்து புதிய பாதையில் நடைபோடத்தான் பலருக்கு பிடிக்கிறது.

அவர்களில் ஒருவர் தான் கோவையைச் சேர்ந்த இன்ஜினியர் கிருபாஷினி. பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர், சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்பி தனக்குப் பிடித்த கிரியேட்டிவ் துறையில் தொழில் துவங்க திட்டமிட்டார்.

யு-டியூப் மூலம் களிமண் மற்றும் ரெசின் கலைகளை கற்றுக் கொண்டவர், நான்கு மாதங்களுக்கு முன்பு கிளே ஆர்ட் அண்ட் ரெசின் ஒர்க்ஸ் நிறுவனத்தை துவங்கினார்.
Latest Tamil News
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தனிப்பயனாக்கப்பட்ட பொருட்களை kirubhsthetic.in என்ற இன்ஸ்டாகிராம் மற்றும் வெப்சைட் மூலம் விற்பனை செய்கிறார். ஒவ்வொரு பொருளிலும் தனது சொந்த கற்பனையைச் சேர்ப்பதே இவரது சிறப்பு.

ரெசின், களிமண் உள்ளிட்டவற்றில் உருவாகும் கீ செயின், போட்டோ பிரேம், பெயர் பலகை, அலங்காரப் பொருட்கள் என, ஒவ்வொன்றிலும் இவரது கலை நயம் இடம் பிடித்துள்ளது.

அதிக உழைப்பும், நேரமும் செலவாகும் இந்த கைவினைப் பொருட்களை வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப தயாரித்து தருவது தான் சிறப்பு.

இந்த மினியேச்சர் கைவினைப் பொருட்களின் ஆரம்ப விலை ரூ.270. டிசைன், அளவு, வேலைப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து விலை மாறும்.
Latest Tamil News
பரிசு, வீட்டு அலங்காரம், நினைவுப் பரிசு என இவரது தயாரிப்பு பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

களிமண் மாறவில்லை. அதை பார்க்கும் தலைமுறையின் கற்பனைதான் மாறியிருக்கிறது.

தொடர்புக்கு: 63829 47880.

Advertisement