அரசு துறைகளின் கண்காட்சி: ஊட்டச்சத்து விழிப்புணர்வு

குன்னுார்:நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை கிராமத்தில் வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட தொழில் மையம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாநில ஊரக வாழ்வாதார திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைதுறை. தாட்கோ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் பங்களிப்பு தொடர்பாக கண்காட்சி நடந்தது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், நடந்த கண்காட்சியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம் பெற்றது. சத்தான உணவுகள் காட்சிப்படுத்தி விளக்கம் அளிக்கப்பட்டது.

இதே போல அந்தந்த துறைகளின் திட்டங்கள், உதவிகள் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement