பூட்டிய கழிப்பறை முன் வைத்த மீன் பெட்டியால் பாதிப்பு

குன்னுார்: குன்னுார் ஆட்டோ ஸ்டாண்ட் எதிர்புறம் ஆற்றோர பகுதியில் உள்ள பொது கழிப்பறை நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டு பயன்பாடின்றி கிடக்கிறது.

இதன் அருகிலுள்ள மீன் கடைகளின் பிளாஸ்டிக் பெட்டிகள் இந்த கழிப்பறை வளாகத்தை சுற்றிலும் அசுத்தமான முறையில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி கடுமையான சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இப்பகுதியில் நிலவும் அவல நிலையை போக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement