நெட் தேர்வில் 3 பாடங்களுக்கு மறுதேர்வு; மாணவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் என ராகுல் குற்றச்சாட்டு
புதுடில்லி: தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தனது தவறுகளுக்காக மாணவர்களைத் தண்டனை அனுபவிக்கச் செய்வதாக காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய தேர்வு முகமை நடத்திய நெட் தேர்வு தொடர்பாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஆங்கிலம், வணிகவியல், சோஷியாலஜி பிரிவுகளில் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய தேர்வு முகமை இப்போது என்ன செய்திருக்கிறது என்று பிரதமர் மோடி பார்க்க வேண்டும்; சமூகவியல், ஆங்கிலம் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான நெட் தேர்வுகள் ஜூன் 22 முதல் 30 வரை நடைபெற்றன. ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தவறான வினாத்தாள், பழைய கேள்விகளையே மீண்டும் கேட்டதாலும் அந்த மூன்று தேர்வுகளையும் என்டிஏ ரத்து செய்துள்ளது.
பல ஆண்டுகளாகத் தயாராகி, விண்ணப்பங்களை நிரப்பி, கட்டணம் செலுத்தி, தொலைதூரத் தேர்வு மையங்களுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான தேர்வர்கள், இப்போது செப்டம்பர் மாதத்தில் இவை அனைத்தையும் மீண்டும் செய்ய வேண்டியுள்ளது.
தவறு செய்வது என்டிஏ, ஆனால் தண்டனையை அனுபவிப்பது மாணவர்கள். பாஜ அரசின் மற்ற எல்லா அமைப்புகளைப் போலவே, என்டிஏவும் ஒருபோதும் அது தங்கள் தவறு என்று ஒப்புக்கொள்வதில்லை. நம்பகத்தன்மை இழந்த மற்ற எல்லாத் தேர்வுகளைப் போலவே, இதிலும் எந்தப் பொறுப்புக்கூறலும் இருக்காது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
தர்மேந்திர பிரதான் பதவி விலகியது முதல் படிதான், கடைசிப் படி அல்ல. என்டிஏவின் தலைமை நிர்வாகமும் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டும். செப்டம்பர் மாதத்தில் மீண்டும் இந்தத் தேர்வை எழுதவிருக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் நான் சொல்வது இதுதான்;
பிரச்னை உங்களிடம் இல்லை. ஒரு தேர்வைச் சரியாக நடத்த முடியாத ஒரு அமைப்பை பிரதமர் மோடி உருவாக்கினார், பிறகு அந்தத் தேர்வை எழுதும் மாணவர்கள் மீதே பழி சுமத்துகிறார். மாணவர்களின் உழைப்பு திருடப்படுகின்றன; இதற்குப் பிரதமர் மோடி பதிலளிக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
NTA என்ற அமைப்பு மூலமாகத்தான் மோடி அரசுக்கு அழிவு காலம் வரப்போகிறது
இந்த ஆளுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம். கர்நாடக, தெலுங்கானா, பஞ்சாப், ஜார்கண்டில் நடந்த முறைகேடுகளால் மாணவர்கள், இளைஞர்கள் குஷியில் இருக்கிறீர்களா. எங்கே தவறு நடந்தாலும் தவறுதான். மூட நக்ஸலைட்டுகளுக்கு பிரிதிபார்க்கும் அளவுக்கு அறிவு வளர்ச்சி வராது என்பது தெளிவாக தெரிகிறது.மேலும்
-
5 நாளுக்கு ஒருமுறை குடிநீர் ‘சப்ளை’ திருத்தணி நகராட்சியில் மக்கள் சிரமம்
-
சாலை பள்ளத்தால் விபத்து ‘ஏசி’ மெக்கானிக் உயிரிழப்பு
-
பெண்களிடம் அத்துமீறல் தட்டிக்கேட்டவருக்கு வெட்டு போதை ஆசாமி கைது
-
ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறு கைரேகை பதிவாகாததால் சிக்கல் 3 மணி நேரம் காத்திருந்து நுகர்வோர் அவதி
-
பஸ்கள் மோதி விபத்து தப்பிய பயணியர்
-
பா.ஜ.,வில் இருந்து விலகல் ஷெசாத் பூனாவாலா அறிவிப்பு