கோவை மாணவர் கொலையில் உண்மையை திசை திருப்ப வேண்டாம்; உதயநிதிக்கு நிர்மல் குமார் பதில்
சென்னை: 'கோவை மாணவன் கொலை, முன் விரோதம் காரணமாக நடந்துள்ளது. போதைப்பொருள் தொடர்பானது அல்ல. சம்பவத்தை திசைதிருப்ப வேண்டாம்' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த கொலை சம்பவங்களை பட்டியலிட்டு சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதாவது; கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன. கோவையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் அமுதனை 20 பேர் கொண்ட கும்பர் அடித்துக் கொலை செய்துள்ளனர். இந்தப் பிரச்னையை நான் சட்டசபையில் எழுப்பிய போது, அது கோஷ்டி பூசல் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கினார்.
ஆனால், 10 பேர் சேர்ந்து ஒருவரை அடித்துக் கொன்றதால், இது கொலை. கோவை செட்டிபாளையம் போலீசார், வழக்கு விசாரணைக்காக அமுதனை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துள்ளனர். அப்படி அங்கு சென்ற அவரிடம் போதைப்பொருள் கும்பல் குறித்து தகவலை கேட்டுள்ளனர்.
அதன்பிறகு, அமுதன் குறித்த தகவலை போதைப்பொருள் கும்பலிடம் பகிர்ந்துள்ளனர். இதுதான் அமுதனுடைய மரணத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இது நான் மட்டும் சொல்லவில்லை, அமுதனின் பெற்றோரே சொல்லியிருக்கிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், கோவை மாணவன் கொலை சம்பவத்தில், உண்மை நிலவரத்திற்கு மாறாக, போதைப்பொருள் தொடர்பான சம்பவமாக வழக்கின் உண்மைத் தன்மையை திசைதிருப்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது; கோவை கல்லூரி மாணவர் அமுதனை, முன்விரோதம் காரணமாக, அதே கல்லூரியில் பயின்று வரும் சக மாணவர்கள் கடந்த 10ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று தாக்கியுள்ளனர். காயமடைந்த அமுதன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக, போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அன்றைய தினமே செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், வன்கொடுமை தடுப்புச்சட்டம் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு 11ம் தேதி அமுதனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அமுதன் உள்ளிட்டோர் சக மாணவர்களை தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸாரின் தீவிர விசாரணையில், 9ம் தேதி இரு குழுக்களுக்கு இடையேயான பழிவாங்கும் நோக்கிலான தாக்குதலே அமுதனின் மரணத்திற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக போதைப்பொருள் பயன்படுத்தியதாக புகாரிலோ, போலீசாரின் விசாரணையிலோ அறியப்படவில்லை. மேலும், பழிவாங்கும் சம்பவங்களை தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை பொறுத்தவரையில் போதைப்பொருள் பயன்படுத்துவதை பார்த்து போலீசாரிடம் அளித்த தகவல் மற்றும் விபரங்களை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் தெரிவித்ததால், இந்தக் கொலை சம்பவம் நடந்ததாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறும் எந்த சம்பவமும் இவ்வழக்கில் நடக்கவில்லை.
இவ்வழக்கு போதைப்பொருள் தொடர்பான வழக்கு அல்ல. இது மாணவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்த சம்பவம் தான். இவ்வழக்கை போதைப்பொருள் தொடர்பான சம்பவமாக வழக்கின் உண்மைத் தன்மையை திசைதிருப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அந்த ஆட்சியிலும் சரி இந்த ஆட்சியிலும் சரி தீயவர்களை கஞ்சா போதையை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை நிச்சயம் அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால் இனத்திற்காக அதை காட்டிக் கொடுத்து சாக வேண்டும்
தினம் தினம் கொடூர படுகொலைகள் நடக்குது .....இதை கேள்வி கேட்க இங்கு எதிர்க்கட்சி என்று எதுவும் இல்லை ....காஞ்சிபுரம் மாவட்டம் படு நெல்லி பகுதியில் இரட்டைக் கொலை...சந்துரு நீலகண்டன் என்ற இரண்டு இளைஞர்களை, மர்மக்கும்பல் மது பாட்டில்களை கொண்டே அடித்து முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளது.....இதுதான் நாட்டில் சட்டம் ஒழுங்கு ....இதுதான் லாட்டரி நூறு நாட்கள் சாதனை ...பொது மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை ...
துனண ஜனாதிபதியே கூறுகிறார் இது போதை கும்பலின் கொலை என்று
கவெக- தமிழக தோல்வி கழகம்
ஆமாங்க போதை விசயத்தில் இந்த கொலை நடக்கவில்லை. அதே போல திருநெல்வேலி மாவட்டம் அரசு பள்ளி மாணவிகள் குடித்தது மது அல்ல சர்பத். பாட்டில் அது மாதிரி இருந்துச்சு
எந்த துறை சம்பந்தப்பட்ட கேள்வியானாலும் 6 அமைச்சர்கள் மட்டுமே பதில் அளிக்கிறார்கள்.. மீதமுள்ள 28 அமைச்சர்கள் எதற்கு என்றே தெரியவில்லை முதல் அமைச்சரையும் சேர்த்து.. அமைச்சர்களிடம் இருந்து பதில் வரும் நேரத்தில் மேஜயை தட்டுகிறார்கள்.. மீதி நேரம் "திக்கு தெரியாத காட்டில் "
முதல்வரோ "பொங்கல் " சாப்பிட்டு வந்து சபைக்கு வந்தவர் போல எந்நேரமும்..
அது சரி, தூய சக்தியான தவெக ஆட்சிக்கு வந்துவிட்டதால், எல்லா இடங்களிலும் தவறு செய்பவர்கள் எல்லாருக்கும் கண்டிப்பாக பாவமன்னிப்பு தரப்பட்டு தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. எல்லோரும் ஒருமுறை ஜோராக கைதட்டி பிறகு எதிரிகள் ஓடும்படி - விசில் அடிக்கவும்.
கைதான கொலைகாரர்களை உடனே சுட்டித் தள்ள தெம்பிருக்கா?
எதற்குமே அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்க மாட்டார்கள் என்பது சிறந்த மாற்றம். காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் பதில் சொல்ல தேவை இல்லை போல உள்ளது. மேலும் இது திமுக - தவேக பிரச்னை இல்லை. மக்கள் பிரச்சனை. அதிலும் மாணவர்கள் பிரச்சனை. இதிலும் அரசியல் செய்து பொறுப்பில் இருந்து விலகுவது நல்லதல்ல.
ஆக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது மாறுவோம் மாற்றுவோம்
போதை பொருட்களே காரணம்... கோவையில் இருக்கும் அவர் கல்லூரி துறை பேராசிரியரே சொல்கிறார்.மேலும்
-
பெண்களிடம் அத்துமீறல் தட்டிக்கேட்டவருக்கு வெட்டு போதை ஆசாமி கைது
-
ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறு கைரேகை பதிவாகாததால் சிக்கல் 3 மணி நேரம் காத்திருந்து நுகர்வோர் அவதி
-
பஸ்கள் மோதி விபத்து தப்பிய பயணியர்
-
பா.ஜ.,வில் இருந்து விலகல் ஷெசாத் பூனாவாலா அறிவிப்பு
-
பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி தடுக்காமல் வேடிக்கை பார்த்த போலீசார்
-
திருப்போரூர் கிளை நுாலகம் தரம் உயர்த்த கோரிக்கை