விவசாயிகள் மானியம் பெற அடையாள எண்ணில் நில விபரம் பதிய வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்
விழுப்புரம்: விவசாயிகள் மானியம் பெற விவசாய அடையாள எண்ணில் அனைத்து நில விபரங்களையும் பதிய வேண்டும் என கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்ணிற்கான பதிவு செய்யும் பணிகள் நடக்கிறது. நேரடி பட்டா உள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் அருகேவுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் அல்லது இ-சேவை மையங்களில் விவசாய அடையாள எண் பெற பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முன்பே, விவசாய அடையாள எண் பதிவு செய்துள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களின் ஒரு பட்டா மட்டுமே பதிவு செய்து அடையாள எண் பெற்றுள்ளனர். அது போல் உள்ள விவசாயிகள் தங்களின் பதிவு செய்யாத நிலங்களின் விபரங்களை வேளாண் துறை அலுவலர்கள் மூலம் பதிந்து புதுப்பிக்க வேண்டும்.
பதிய வரும் விவசாயிகள் தங்கள் பெயரில் உள்ள அனைத்து பட்டாக்கள், ஆதார், இந்த எண்ணோடு மொபைல் எண் ஆகிய விபரங்களோடு வேளாண் துறை, தோட்டக்கலை துறை அலுவலர்களை அணுகி பதியலாம்.
வருங்காலங்களில் பயிர் கடன், உரம் விநியோகம் மானிய திட்டங்கள் விவசாய அடையாள எண்ணிற்காக பதிவு செய்துள்ள நில பரப்புகளின் அடிப்படையில் மட்டுமே திட்ட பயன்கள் வழங்கப்பட உள்ளது.
விவசாயிகள் தங்கள் பெயரிலுள்ள நில விபரங்களை விடுபாடின்றி விவசாய அடையாள எண்ணில் பதிய வேண்டும்.
விவசாய அடையாள எண் பெற்ற விவசாயிகள் 'நம்ம வயல்' என்ற செயலி மூலம் தங்கள் வயலில் பயிரிட்டுள்ள பயிர் சாகுபடி விபரங்களை மின்னணு பயிர் கணக்கீட்டில் பதிவு செய்ய முடியும். இந்த செயலி ஆண்ட்ராய்ட் மொபைலில் மட்டுமே செயல்படும்.
இந்த செயலி மூலம் விவசாயிகள் தங்களது மொபைல் மூலம் மின்னணு பயிர் கணக்கெடுப்பை தாங்களே மேற்கொள்ள முடியும்.
தன்னார்வலர்கள் மூலமாகவும் தங்கள் கிராமத்தில் மின்னணு பயிர் கணக்கெடுப்பை செய்யலாம். விவசாயி பதிவு எண்ணில் விடுபட்ட நிலங்களை வேளாண்மை துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் கண்டறியலாம். விவசாயி செயலியில் விவசாய அடையாள எண்ணில் இணைக்கப்பட்ட அவர்களின் நிலங்கள், உட்பிரிவுகளை காணலாம்.
இதன் மூலம் ஏதேனும் நிலத்தின் சர்வே எண் அல்லது உட்பிரிவு எண் விடுபட்டிருந்தால், உடனே தெரியவரும். இதன் மூலம் விடுபாடின்றி நில உடமை விபரங்களை பதிவு செய்து, அரசு வழங்கும் அனைத்து திட்ட பயன்களையும் முழுமையாக பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறு கைரேகை பதிவாகாததால் சிக்கல் 3 மணி நேரம் காத்திருந்து நுகர்வோர் அவதி
-
பஸ்கள் மோதி விபத்து தப்பிய பயணியர்
-
பா.ஜ.,வில் இருந்து விலகல் ஷெசாத் பூனாவாலா அறிவிப்பு
-
பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி தடுக்காமல் வேடிக்கை பார்த்த போலீசார்
-
திருப்போரூர் கிளை நுாலகம் தரம் உயர்த்த கோரிக்கை
-
தவெகவின் 100 நாள் ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை: சொல்கிறார் இபிஎஸ்