இஸ்ரேலுடனான தனது நட்பை இந்தியா மதிக்கிறது; பிரதமர் மோடி

2


புதுடில்லி: இந்தியாவின் 80வது சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அதிபர் ஐசக் ஹெர்சாக் உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. இந்தியா, இஸ்ரேலுடனான தனது நட்பை மதிக்கிறது. நமது மக்களின் நலனுக்காக இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். அதேபோல் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த, கயானா நாட்டு அதிபர் டாக்டர் இர்பான் அலி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட நாட்டு தலைவர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement