திரிணமுல் காங்., அலுவலகத்தில் முன்னாள் துணை சபாநாயகர் சடலமாக மீட்பு

8


கோல்கட்டா: மேற்குவங்க முன்னாள் துணை சபாநாயகர் அஷீஸ் பானர்ஜி திரிணமுல் காங்., அலுவலகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேற்குவங்கத்தில் மம்தாபானர்ஜி முதல்வராக இருந்த போது துணை சபாநாயகராக பணியாற்றியவர் அஷீஸ் பானர்ஜி. இவர் 5 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட இவர் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 16) பீர்பூம் மாவட்டத்தில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் இறந்த நிலையில் அஷீஸ் பானர்ஜி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தனரா என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். அவர் எழுதி வைத்த கடிதம் ஒன்றை போலீசார் கண்டெடுத்து உள்ளனர்.

ஒரு பக்கம் கொண்ட கடிதத்தில், ''எந்தவொரு வேலைக்காகவும் பணம் பெற்றதில்லை; கட்சிக்குள் நடக்கும் தவறுகளை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அவற்றை எதிர்த்துப் போராட இயலவில்லை'' என்று அஷீஸ் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

மம்தா பானர்ஜிக்கு நெருக்கமான மாஜி அமைச்சர் மர்ம மரணம்; பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement